Vijay: விஜய்யின் கடைசி படம்.. டைட்டில் இதுவா.. குடியரசு தினக் கொண்டாட்டமாக வெளியாகும் டைட்டில் டீசர்

சென்னை: நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படம் அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த படம் விஜய்க்கு சிறப்பாக கைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay thalapathy 69 movie h vinoth 69


நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் இறுதி படமாக உருவாகி வருகிறது தளபதி 69. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் சிறப்பான திட்டமிடலுடன் நடந்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்துவரும் இந்த படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தளபதி 69 படம் ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இந்த படத்தின் ரிலீஸ் சிறப்பாக கை கொடுக்கும் என்று விஜய் தரப்பு திட்டமிட்டு வருகிறது.

தளபதி 69 டைட்டில் டீசர்: ஒரு புறம் நடிப்பு மறு புறம் அரசியல் என விஜய் பிஸியாக செயல்பட்டு வருகிறார். அரசியல் களத்தில் அவரது அடுத்தடுத்து நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் தளபதி 69 படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26ம் தேதி தளபதி 69 படத்தின் டைட்டில் டீசர் வெளியாக உள்ளதாகவும் இதற்கான வீடியோ தயார் செய்யப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தலைப்பு நாளைய தீர்ப்பு என்று கூறப்பட்டு வருகிறது.

தளபதி 69 பட டைட்டில்: விஜய் ஹீரோவாக நடித்து கடந்த 1992ம் ஆண்டில் வெளியானது நாளைய தீர்ப்பு படம். இந்தப் படம் அவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்த நிலையில் அதே தலைப்புடன் தனது இறுதி படத்தை அவர் நிறைவு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து இன்னும் சில தினங்களில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த பொங்கலையொட்டியே தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதே போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது டைட்டில் டீசருக்கான வீடியோ ரெடியாகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனால் குடியரசு தினத்தில் இந்த டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பான டைட்டில்: 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடவுள்ளதாக விஜய் முன்னதாக அறிவித்துள்ள நிலையில், நாளைய தீர்ப்பு என்ற இந்த டைட்டில் அவருக்கு சிறப்பாக பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை நிறைவு செய்துவிட்டு தன்னுடய அரசியல் நகர்வுகளை விஜய் மேலும் வலுவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X