மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநருடன் இணையும் விஜய் பட தயாரிப்பு நிறுவனம்.. மல்லுவுட்டில் சூப்பர் என்ட்ரி!
கொச்சி: நடிகர் விஜய்யின் இறுதி படமான தளபதி 69 படத்தை தயாரித்து வருகிறது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இதன் மூலம் தமிழில் இந்நிறுவனம் மாஸான என்ட்ரியை கொடுக்கவுள்ளது. இதனிடையே கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தையும் இந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் திரில்லர் படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் மல்லுவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கேவிஎன் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. கடந்தஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்துடன் கேவிஎன் நிறுவனம் கைக்கோர்த்துள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் இறுதி படமாக உருவாகி வருகிறது தளபதி 69. இந்த படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வரும் சூழலில் வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அடுத்தடுத்த பிளான்களை போட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அரசியல் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோள் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டின் ஜனவரி இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாகவும் இந்த படத்தின் புதிய அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ்: இன்னும் தளபதி 69 படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் மூலம் தமிழில் இந்நிறுவனம் மாஸான என்ட்ரி கொடுத்துள்ளது. முதல் படமே நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் அதிகமான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தையும் இந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றையும் கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருடன் கூட்டணி: இந்நிலையில் அடுத்ததாக மலையாளத்திலும் இந்நிறுவனம் என்ட்ரி கொடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை வசூலையும் குவித்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரத்துடன் கேவிஎன் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கு ஆவேசம் பத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் திரைக்கதையை அமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்திருந்த சுஷின் ஷியாம் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
கேவிஎன் & சிதம்பரம் காம்பினேஷன்: படத்தின் அறிவிப்பு போஸ்டரை தற்போது கேவிஎன் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய கூட்டணி குறித்து இயக்குநர் சிதம்பரம் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். இந்தக் கூட்டணியை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் தன்னுடைய ஆர்வத்தை இந்தக் கூட்டணி அதிகமாக தூண்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த டீமுடன் இணையும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











