Thalapathy68: சென்னையில் நடைபெற்ற தளபதி 68 பட பூஜை.. வெளியான புகைப்படம்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதன் ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையும் தளபதி 68 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளது. பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தளபதி68 பட பூஜை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த காம்போ இணைந்துள்ளது. முதல் படத்தை போல இல்லாமல், லியோ படம் தன்னுடைய 100 சதவிகித ஸ்டைலில் வெளியாகவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில், படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் வெங்கட்பிரபு ஈடுபட்டிருந்தார். குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பா மற்றும் மகன் என இரு கேரக்டர்களில் இந்தப் படத்தில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்சில் அவருக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். ஆனால் லியோ படத்தை போலவே இந்தப் படத்திற்கும் படக்குழுவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து இந்த பூஜையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதேபோல படத்தில் தற்போது மைக் மோகன் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் நாளை துவங்கவுள்ள படத்தின் சூட்டிங், வரும் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அதையடுத்து அடுத்தக்கட்ட ஷெட்யூல், வெளிநாட்டில் நடக்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தளபதி68 படத்தின் பூஜை எளிமையாக படக்குழுவினரை மட்டுமே வைத்து நடத்தப்பட்டாலும் இதன் சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தில் மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











