Thalapathy68: விஜய்யை இளமையாக காட்ட இவ்வளவு கோடி செலவா.. மாஸ் காட்டும் தளபதி 68!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார் விஜய். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது.

சென்னையில் பாடல் காட்சியுடன் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. இந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் நடனம் அமைத்து வருகிறார்.

விஜய்யின் இளமை தோற்றத்திற்காக பல கோடி செலவழிக்கும் தளபதி68 டீம்: நடிகர் விஜய்யின் லியோ படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் உருவாகியுள்ளது. வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக லியோ வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கிய நிலையில் காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Actor Vijays Thalapathy68 team spends 20 crores for Vijays young look

இந்தப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான அதிகப்பட்சமான ப்ரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசான நிலையில், அதிகப்பட்ச வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய அடுத்தப்படமான தளபதி68 படத்தின் சூட்டிங்கில் விஜய் இணைந்துள்ளார்.

சென்னையில் இந்தப்படத்தின் சூட்டிங், பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தின் முதல்கட்டமாக சென்னையில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனம் அமைத்து வருகிறார். சென்னையில் இந்த பாடலின் சூட்டிங் சில தினங்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கை வெளிநாட்டில் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கான லொகேஷன் தேடும் நிகழ்வையும் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு மேற்கொண்டுள்ளார். படத்தின் 80 சதவிகித சூட்டிங் வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேமிலி சென்டிமெண்ட், ஆக்ஷன் என பல தளங்களில் இந்தப் படத்தின் கதை பயணிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், படம் மிகப்பெரிய என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகவுள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் கேரக்டர்களில் நடிகர் விஜய் இருவேறு கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார்.

இதையொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு லாஸ் ஏஞ்சல்சில் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்நிலையில், விஜய்யை மகன் கேரக்டரில் மிகவும் இளமையாக காட்டுவதற்காக படக்குழு 20 கோடி ரூபாய்களை தனியாக செலவழிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கெட்டப்பில் 25 வயது இளைஞன் கேரக்டரில் விஜய் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தக் கேரக்டரை மேலும் மெருகேற்ற படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தளபதி68 படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலில், விஜய்யுடன், பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். நட்பை சிறப்பாக வெளிக்காட்டும்வகையில் இந்த பாடல் எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என பல்வேறு அம்சங்களுடன் படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X