ரெண்டு பாட்டை பார்த்தாச்சு.. ஃபுல் ஆல்பம் கேட்க வேணாமா.. விஜய்யின் கோட் இசை வெளியீடு அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் விஜய் -இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி இந்த படத்தின் ப்ரோமோஷன்களை முன்னதாகவே இந்த டீம் துவங்கியுள்ளது. முன்னதாக போஸ்டர்கள் வெளியான நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்தப் பாடல்கள் சில கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்ய தவறவில்லை. குறிப்பாக இந்த இரு பாடல்களுமே விஜய் வாய்ஸில் வெளியானது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மற்றும் பிரபுதேவா காம்பினேஷன் காட்சிகளும் சென்னையில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்திலும் இணையவுள்ள விஜய், இதையடுத்து சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் முன்னதாக தன்னுடைய கட்சி அறிவிப்பின்போதே கூறிவிட்டார். ஆனாலும் அவர் தளபதி 70 படத்திலும் நடிக்க உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
GOAT படம்: தளபதி 70 படத்தை அட்லி இயக்க உள்ளதாகவும் முன்னதாக அட்லி தன்னுடைய பேட்டியில் கூறியபடி, ஷாருக்கான் -விஜய் காம்பினேஷனில் இந்த படம் உருவாகவுள்ளதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அட்லி தன்னுடைய பேட்டியில் கூறியபோதே இந்த காம்பினேஷன் குறித்து ரசிகர்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வெளியிட்ட நிலையில், இந்த காம்பினேஷனில் தளபதி 70 படம் நிறைவேறுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இசை வெளியீடு அப்டேட்: இந்த படத்தின் சூட்டிங்கை போலவே டப்பிங் வேலைகளையும் நடிகர் விஜய் முன்னதாகவே முடித்துக் கொடுத்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்து இரு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த இரு பாடல்களும் விஜய் வாய்ஸிலேயே வெளியானது. முதல் பாடல் அதிரடியாக வெளியான நிலையில் இரண்டாவது பாடல் மெலடியாக வெளியானது. இரண்டாவது பாடலை ஏஐ உதவியுடன் மறைந்த பாடகி பவதாரணி வாய்சுடன் இணைந்து விஜய் பாடியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
ஆகஸ்டில் கோட் இசை வெளியீடு: கோட் படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 3வது வாரத்தில் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இரு பாடல்களை லிரிக் வீடியோவாக பார்த்து ரசித்துவரும் ரசிகர்கள், அடுத்தடுத்த பாடல்களை கேட்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











