Vijay: விஜய் குரலில்.. யுவன் மியூசிக்கில் நாளை வெளியாகும் GOAT பட ஃபர்ஸ்ட் சிங்கிள்.. இதோ ப்ரமோ!
சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில் இறுதிப் படங்களாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் அமைந்துள்ளன. இதில் GOAT படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்கோவில் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. வரும் 17ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் ப்ரோமோவை படக்குழுவினர் இன்று மாலை வெளியிட்டுள்ளனர். நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் இணைந்துள்ள சூழலில் படத்தின் இசை மாஸாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்தப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் நடந்து வரும் சூழலில் வரும் 17ம் தேதியுடன் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்: வரும் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் விஜய் அதில் வாக்களிக்கும் வகையில் இந்த படத்தின் சூட்டிங் முன்னதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளைய தினம் தமிழ் புத்தாண்டையொட்டி மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் முன்னதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

விஜய்யின் குரலில் பாடல்: விஜய்யின் குரலில் இந்த படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் தற்போது அந்த பாடல் தான் நாளைய தினம் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான சிறிய ப்ரொமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ள சூழலில் அதில் விஜய்யின் குரலில் யுவனின் மேஜிக்கில் இந்த பாடல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமோவை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜயின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு எப்போதுமே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வரும் சூழலில் நாளைய தினம் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபர்ஸ்ட் சிங்கிள் பிரமோ: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, இந்தப் படம் துவங்கியதில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்கோவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், சூட்டிங்கின் லொகேஷன் புகைப்படங்கள் மற்றும் விஜய்யின் ஸ்கேட்டிங் பயிற்சி வீடியோ போன்றவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த பிரமோவையும் உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











