Vijay: ஆர் யூ ரெடி?.. விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அர்ச்சனா கல்பாத்தி கேள்வி!
சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சிநேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வரும் சூழலில் வரும் 17ம் தேதியுடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் அங்கேயே நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து விஜய் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலை அடுத்து வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்படும் சூழலில் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்களை அன்றைய தினம் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் விஜய்: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்து வருகிறது. வரும் 17ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் படக்குழுவினர் நிறைவு செய்ய உள்ளனர். தொடர்ந்து அன்றைய தினமே நாடு திரும்பவுள்ள நடிகர் விஜய், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து வரும் ஜூன் மாதத்தில் தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 69 படம்: இந்தப்படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. நடிகர் விஜய்யே இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள சூழலில் இது குறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபு -விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் தமிழ் புத்தாண்டையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாக உள்ளதாக முன்னதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் கிரியேட்டில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டவர்கள் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் என குறிப்பிட்டு ஆர் யூ ரெடி என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் எப்போதுமே ரெடி தான் என்று விஜய் ரசிகர்களும் தொடர்ந்து அடுத்தடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்குப் பிறகு விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ள சூழலில் நாளை வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

யுவன் மேஜிக்: பிஜிஎம் கிங் என்று கூறப்படும் யுவன் சங்கர் ராஜா கோட் படத்தில் விஜய்க்காக சிறப்பான பிஜிஎம்ஐ அமைத்துள்ளதாகவும் படத்தில் நான்கு பாடல்கள் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்ட்ரோ சாங்கில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் இணைந்து ஆட்டம் போட்டுள்ளனர். இந்தப் பாடல்தான் நாளை வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் அது இந்த பாடலா என்பது குறித்தும் நாளை தெரியவரும். விஜய் படங்களில் ரிலீஸ் போலவே அவரது ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றன. அந்த வகையில் இந்த பாடலும் ரசிகர்களை கொண்டாடச் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











