Vijay: மிகப்பெரிய தொகைக்கு விற்றுத் தீர்ந்த விஜய்யின் கோட் பட சாட்டிலைட் ரைட்ஸ்.. அட இவ்வளவு கோடிகளா

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள சூழலில், படத்தின் சூட்டிங்கை சரியான திட்டமிடலுடன் கொண்டு சென்று வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் டைம் ட்ராவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னதாக சிம்பு நடிப்பில் டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்ட மாநாடு படம் சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்று தந்த சூழலில் அந்தப் பட வரிசையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள சூழலில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

Actor Vijay s The greatest of all time movie satellite rights sold out for huge amount it seems

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் என்ட்ரி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ்: செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் டைம் டிராவலை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். நடிகை திரிஷா விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள நிலையில் பாடல் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பட்டாளங்கள்: இதேபோல படத்தில் சிவகார்த்திகேயனும் கேமியோ கேரக்டரில் இணைந்துள்ளதாகவும் இதற்கான சூட்டிங் தற்போது சென்னையில் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வெங்கட் பிரபுவின் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட கேங்கும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இதுபோல ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ள சூழலில் இவர்களை படத்தில் எப்படி வெங்கட் பிரபு பயன்படுத்தியிருப்பார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். யுவன் இசையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

சாட்டிலைட் உரிமை: இந்நிலையில் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் இந்திய அளவிலான அனைத்து மொழிகளின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க், 93 கோடி ரூபாய்களுக்கு வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட் மற்றும் லியோ படங்களின் தென்னிந்திய சாட்டிலைட் உரிமை 73 கோடி ரூபாய்களுக்கு விற்பனை ஆனது. இதேபோல, முன்னதாக புஷ்பா 2 படத்தின் தென்னிந்திய சாட்டிலைட் உரிமம் 65 கோடி ரூபாய்களுக்கு விற்பனை ஆன நிலையில், இந்த ரெக்கார்டுகள் அனைத்தையும் தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சாட்டிலைட் விற்பனை பீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தளபதி 69 படத்தின் சாட்டிலை உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X