இன்னும் சில நாள்தான்.. கோட் படம் குறித்து அதிகமா சொல்றேன்.. மோகன் பேட்டியால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் 90களின் வெள்ளிவிழா நாயகன் மோகன் வில்லனாக இணைந்துள்ளார்.

நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த மோகன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள திரில்லர் படம் ஹரா ரிலீசாகவுள்ளதால் அந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக பேசிய மோகன் விஜய்யின் கோட் படம் குறித்தும் சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார்.

Vijay The greatest of all time movie Mohan Haraa movie tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய், மோகன், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் இலங்கை ஷெட்யூல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை. மோகன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற இந்த ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தன்னுடைய போர்ஷனை சில தினங்களுக்கு முன்னதாகவே நடிகர் விஜய் நிறைவு செய்துள்ளார்.

2வது சிங்கிள்: மேலும் படத்தின் டப்பிங் வேலைகளையும் விஜய் பூர்த்தி செய்து விட்டதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 50 சதவிகித டப்பிங் வேலைகளை விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது முழுமையாகவே நிறைவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில் அடுத்ததாக விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் 2வது சிங்கிள், வரும் 22ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

விஜய்க்கு வில்லன்: இந்த படத்தில் நடிகர் மோகன் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். 90களின் வெள்ளி விழா நாயகனான மோகன் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் சில காலங்கள் ஒதுங்கி இருந்த சூழலில், தற்போது அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள திரில்லர் படமான ஹரா ரிலீசாகவுள்ள சூழலில் வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் ரிலீசாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஹரா படத்திற்கான பிரமோஷன்களில் தற்போது மோகன் ஈடுபட்டுள்ள சூழலில் கோட் படத்தின் சில சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.

கோட் குறித்து மோகன்: இலங்கையில் நடந்துவந்த ஷெட்யூல் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளதாகவும் இந்தப் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் தான் இணைந்தது சூப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்து அதிகமாக பேச முடியாது என்றும் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையுள்ள சூழலில் அதை தொடர்ந்து தயாரிப்பு தரப்பின் ஒப்புதலுடன் படம் குறித்து அதிகமாக பகிர்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து அமைதியான நாயகனாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் மோகன் விஜய்க்கு வில்லனாக எப்படி அமைவார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X