Actor Vijay: விஜய் -திரிஷா காம்பினேஷனில் வெளியாகும் பாடல்.. கோட் பட 3வது சிங்கிள் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக மோகன் இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் குடும்ப செண்டிமெண்டையும் இணைத்து கோட் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள சூழலில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே போல படத்தின் இசை வெளியிடும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay The greatest of all time movie Venkat prabhu tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆக இன்னும் 47 நாட்கள் மட்டுமே உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. தன்னுடைய சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை நடிகர் விஜய் நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த நடிகர்களின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கோட் பட பாடல்கள்: கோட் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட காலங்களுக்குப் பிறகு விஜய்யுடன் அவர் கோட் படம் மூலம் இணைத்துள்ளார். யுவன் இசையில் கோட் படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த இரண்டு பாடல்களையும் நடிகர் விஜய் பாடியுள்ளார்.

மூன்றாவது பாடல் அப்டேட்: குறிப்பாக மெலடியாக வெளியான 2வது பாடலில் மறைந்த பாடகி பவதாரணி வாய்சுடன் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடிகர் விஜய் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த படத்தின் 3வது பாடல் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகை திரிஷா, விஜய்யுடன் இணைந்து பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ள நிலையில் இந்தப் பாடல் தான் அடுத்ததாக லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லியோ படத்துக்கு பிறகு இந்த பாடலில் விஜய் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி மீண்டும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

GOAT பட இசை வெளியீடு: இந்த படத்தின் இசை வெளியீடும் ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அடுத்தடுத்த அப்டேட்களுடன் படக்குழுவினர் ரசிகர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ப்ரோமோஷன்களும் முழு வீச்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஏராளமான ரசிகர்களுடன் கோட் படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. வழக்கமான அவரது கொண்டாட்டங்களுடன் கோட் படமும் வெளியாகி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X