Actor Vijay: அடுத்தடுத்த கொண்டாட்டங்கள்.. கோட் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சென்டிமென்ட்க்கும் குறைவிருக்காது என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் அடுத்த பாடல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகியுள்ளதாகவும் திரிஷா மற்றும் விஜய் இணைந்து இந்த பாடலில் ஆட்டம் போட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Vijay The greatest of all time movie Venkat prabhu tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து ரசிகர்களை அடைந்த வண்ணம் உள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

GOAT படம்: விஜய்யின் அடுத்தடுத்து இரண்டு படங்கள் அவரது இறுதி படங்களாக அமையவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இசை வெளியீட்டில் விஜய்யின் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் தற்போதே வெயிட்டிங். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக படத்தில் மூன்றாவது கெட்டப்பிலும் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

GOAT படத்தின் 3வது சிங்கிள்: படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்புகளின் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது. இது மட்டும் இல்லாமல் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதுவும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள படத்தின் மூன்றாவது சிங்கிள், விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள பாடலாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் விஜய்யின் பஞ்ச் பாடலாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ட்ரெயிலர் ரிலீஸ்: இதேபோல, வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்துடன் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X