Actor Vijay: GOAT படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்.. புகைப்படங்களை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!

சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்த சூழலில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் சூட்டிங் முன்னதாக கேரளா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த சூழலில் தற்போது அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர்.

இதையொட்டி முன்னதாக துபாய் விமான நிலையத்தில் விஜய் காணப்படும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. மாஸ்கோவில் தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் இரு வாரங்கள் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஷூட்டிங் நடக்கும் இடத்தின் புகைப்படங்களை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

Actor Vijay s The greatest of all time movie s shooting spot location shared by Archana kalpathy

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் துவங்கியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் துபாய் வழியாக ரஷ்யா புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்தில் அவர் இருக்கும்படியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சென்னை, கேரளா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் இந்த படத்தில் விஜய் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

நடிகர்கள் பாராட்டு: மிகவும் மாஸாக படம் உருவாகி வருவதாக படக்குழுவினர் அடுத்தடுத்து பேட்டிகளின் மூலம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் கோட் படம் சிறப்பாக உருவாக்கி வருவதாக குறிப்பிட்ட சூழலில் நேற்றைய தினம் நடிகர் பிரசாந்த் தன்னுடைய பேட்டி ஒன்றில் இந்த படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதாகவும் ரசிகர்களுக்கு படம் விருந்தாக அமையும் என்றும் கூறியுள்ளார். நேற்றைய தினம் பிரசாந்தின் பிறந்த நாளை ஒட்டி அவரது கேரக்டர் புகைப்படத்தை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் துவங்கியுள்ள சூழலில் தொடர்ந்து இரு வாரங்கள் அங்கு சூட்டிங் நடக்க உள்ளது.

அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட புகைப்படங்கள்: இதையடுத்து ஒட்டுமொத்தமாக படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள இந்த ஷூட்டிங் லொகேஷன் புகைப்படங்களை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகவுள்ளது. இது விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் இணைந்து ஆட்டம் போட்ட பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 69 படம்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தன்னுடைய தளபதி 69 படத்தில் இணையவுள்ளார். இந்த இரு படங்களை நிறைவு செய்துவிட்டு அவர் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக முன்னதாக அறிவித்துள்ளார். மேலும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அவர் பணியாற்ற திட்டமிட்டுள்ளார். இதனிடையே வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ள தளபதி 69 படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் கதைக்களம் அரசியலை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X