Indian 2: பிரம்மாண்ட மேடையில் இந்தியன் 2 இசை வெளியீடு.. சிறப்பு விருந்தினராக விஜய் மனைவி!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் அவரது இந்தியன் 2 படம் ரிலீசாக உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக அடுத்தடுத்து ஆறு மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் இன்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் நடந்து வருகிறது. இதில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

Vijay Sangeetha Kamal haasan Shankar Anirudh tamil cinema 2

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து நடித்து முடித்துள்ள படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் முடங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் தூசி தட்டப்பட்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அடுத்த மாதம் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

சேனாபதியாக கமல்ஹாசன்: படத்தின் சூட்டிங் ஹைதராபாத், திருப்பதி, பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டு தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் சேனாபதியாக மிரட்ட காத்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த கேரக்டருக்காக அவர் கடந்த இந்தியன் படத்தில் மிகப்பெரிய மெனக்கெடலை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அதே மாதிரியான மெனக்கெடலை தற்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படங்களிலும் மேற்கொண்டுள்ளார். இந்த மேக்கப்பை போட்டு முடிக்க அவருக்கு ஆறு மணி நேரங்கள் பிடித்ததாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்கள்: மேக்கப்பை போடுவதற்கு 6 மணிநேரங்கள் தேவைப்பட்டதை போலவே அதை கலைக்கவும் ஆறு மணி நேரங்கள் பிடித்துள்ளது. இடையில் வாயை திறந்து எதையும் சாப்பிடக்கூட முடியாமல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக ராம்சரண் உள்ளிட்டவர்கள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது படத்தின் இந்த இசை வெளியீட்டில் சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

விஜய் மனைவி சங்கீதா: லைகா தயாரிப்பில் இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இதனிடையே லைகா தயாரிப்பில் அடுத்ததாக விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்க உள்ளார். இந்நிலையில் இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய்யின் மனைவி சங்கீதாவும் இணைந்துள்ளார். இதனிடையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா உள்ளிட்டவர்களும் இந்த ஆடியோ லாஞ்சில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், காஜல் அகர்வால் ஆகிய படக்குழுவினரும் இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியன் 2 பட பிரமோஷன்கள்: சித்தார்த் தற்போது வெளிநாட்டி9ல் உள்ள சூழலில் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் அவரது லைவ் இசை நிகழ்ச்சி இந்த மேடையில் நடக்கவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மேடையும் மிகவும் பிரம்மாண்டமாக காணப்படுகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் உள்ள சூழலில் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பான வகையில் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக ஐபிஎல் போட்டியின் போது தங்களது ப்ரோமோஷன்களை பட குழுவினர் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X