புனித் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி.. குடும்பத்தினருக்கு ஆறுதல் !

சென்னை : மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் விஜய்சேதுபதி அஞ்சலி செலுத்தினார்.

Recommended Video

Vijaysethupathi-யை தாக்கியது யார்? | Bangalore Airport, Puneeth Rajkumar Samadhi

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனித், இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.

இவர், அக்டோபர் 29ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

புனித் உயிரிழந்தார்

புனித் உயிரிழந்தார்

சுயநினைவை , இழந்த நிலையில் இருந்த அவர், விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பேரதிர்ச்சி

பேரதிர்ச்சி

புனித்தின் மரணச் செய்தி அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பல திரைப்பிரபலங்கள் சமூக வலைத்தள பக்கத்திலும் இரங்கல் தெரிவித்தனர்.

இறுதிசடங்கு

இறுதிசடங்கு

புனித் ராஜ்குமாரின் இறுதிஊர்வலம் அக்31ந் தேதி கண்டீரவா ஸ்டேடியத்தில் தொடங்கியது. யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்கமுழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விஜய்சேதுபதி அஞ்சலி

விஜய்சேதுபதி அஞ்சலி

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி உள்ளார். மேலும், புனித் ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

4 பேருக்கு பார்வை கிடைத்தது

4 பேருக்கு பார்வை கிடைத்தது

தானமாக வழங்கப்பட்ட புனித் ராஜ்குமாரின் கண்கள் நாராயண நேத்ராலயா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. வழக்கமாக கண்களை அதிகபட்சம் இருவருக்கு தான் பொருத்த முடியும். ஆனால், புனித் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. துயரமான அந்த நேரத்திலும் தாமதிக்காமல் கண்களை தானமாக அளித்த அவரின் குடும்பத்தினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X