விக்ரம் உடல்நிலை தேற பிரார்த்தித்த பிரபலங்கள்.. ரசிகர்கள்.. அப்பா குறித்து அப்டேட் சொன்ன த்ருவ்!

சென்னை : நடிகர் விக்ரம் சேது படத்தின் மூலம் சிறப்பான அங்கீகாரத்தை பெற்றவர்.

Recommended Video

நடிகர் Vikram-க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! என்ன ஆனது ? *Kollywood | Filmibeat Tamil

அந்தப் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு ஏறுமுகமாக அமைந்தவை.

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகர் விக்ரம்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் கோலிவுட்டில் காதல் ஹீரோவாகத்தான் அறிமுகமானார். குழந்தை முகத்துடன் இவர் உல்லாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே விக்ரமிற்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. மாறாக பாலாவின் இயக்கத்தில் வெளியான சேது படம்தான் அவருக்கு சிறப்பான நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

அங்கீகாரத்திற்கு காத்திருப்பு

அங்கீகாரத்திற்கு காத்திருப்பு

இத்தகைய அங்கீகாரத்திற்காகத்தான் காத்திருந்தார் விக்ரம். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே இதை அவர் உணர்ந்திருந்தார். அதனால் இந்தப் படத்தை ஒரு தவம் போல எடுத்துக் கொண்டு தன்னுடைய கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தினார். குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்ட கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெட்டார்.

ஏமாற்றாத விக்ரம் படங்கள்

ஏமாற்றாத விக்ரம் படங்கள்

தொடர்ந்து அதே வேட்கையுடன்தான் தனது அனைத்து கேரக்டர்களையும் அணுகி வருகிறார் விக்ரம். விக்ரம் படம் என்றால் அதில் கண்டிப்பாக நமக்கு தேவையான என்ஜாய்மெண்ட் இருக்கும் என்று அவரது படங்களை பார்க்க செல்லும் ரசிகர்களை அவர் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. இது சமீபத்தில் வெளியான மகான் படம் வரை தொடர்ந்து வருகிறது.

உடல்நிலை பாதிப்பு

உடல்நிலை பாதிப்பு

தொடர்ந்து தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களுக்கான நியாயத்தை கொடுத்துவரும் விக்ரம் தனது உடல்நலத்திற்கு நியாயம் செய்யத் தவறியுள்ளார். அதன் விளைவு தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது உடல்நிலை தேற திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கண்டுள்ளனர்.

சாந்தனு பிரார்த்தனை

சாந்தனு பிரார்த்தனை

நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் உடல்நிலை தேற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் சியான் விக்ரமை ட்ரெண்டிங் செய்து அவரது உடல்நிலை தேற வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

த்ருவ் விக்ரம் விளக்கம்

த்ருவ் விக்ரம் விளக்கம்

இதனிடையே, விக்ரமிற்கு மாரடைப்பு என வந்த செய்திகள் தவறானவை என்றும் அவருக்கு லேசான நெஞ்சு வலி என்றும் விக்ரமின் மேனேஜர் மற்றும் மகன் த்ருவ் விக்ரம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தவறாக பரப்பப்படும் இத்தகைய செய்திகள் வருத்தத்தை அளித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X