ஹேட்டர்ஸ் இல்லாத ஒரே நடிகர்.. சியான் விக்ரமின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் சீயான் என செல்லமாக அழைக்கக் கூடியவர் விக்ரம். இன்று அவர் தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வீர தீர சூரன் படத்தின் வெற்றியோடு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர். பேரன்பு கொண்டு சமூகவலைதளங்களில் இன்பாக்ஸ் நிறைந்து வழிகிறது. இந்நிலையில், அவரது சொத்து மதிப்பை கேட்டால் அசந்து போவீர்கள்.
நடிகர் சிவாஜி, கமலுக்கு பிறகு எந்த கதாப்பாத்திரத்திலும் பொருந்தக் கூடியவர் விக்ரம் என சினிமா விமர்சகர்கள் வியந்து பேசியுள்ளனர். கெட்டப்புகளை மாற்றிவிட்டால் நடிப்பு வந்துவிடுமா என்பதை தாண்டி அந்த கதாப்பாத்திரத்திற்காக தன்னால் முயன்றா நியாயங்களை சரியாக செய்வதில் வல்லவர் விக்ரம். கமல்ஹாசன் படங்களில் நாயகன், மகாநதி, குணா மற்றும் பல படங்களை சொல்வார்கள். அதேபோன்று விக்ரம் தன் உடலை வறுத்தி நடிக்க கூடியவர் என்று பலராலும் வியக்கக் கூடிய மனிதராக விக்ரம் இருக்கிறார்.

சேது, பிதாமகன், பீமா, தெ.ய்வத்திருமகள், ஐ, தங்கலான் என ஒவ்வொரு படத்திற்கும் தன்னையே செதுக்கி வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பார். இப்படங்களை திரையில் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு பிரம்மிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. எப்படி இவரால் இதனை சாத்தியப்படுத்த முடிகிறது. வணிக ரீதியாக போட்டியாக இருக்கும் நடிகர்கள் கூட இவருடன் பேசி பழகினால் ஜெல் ஆகிவிடுவார்கள். ஹேட்டர்ஸ்களே இல்லாத ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வரக் கூடியவர் விக்ரம். நடிகர் விஜய்யிடம் விக்ரம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு உடலை வறுத்தி நடிப்பார் என தெரிவித்தார். அதேபோனறும் இளம் நடிகர்களும் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என இன்றுவரை வியந்து பார்க்கும் நடிகராக விக்ரம் இருக்கிறார்.
விக்ரமை பார்த்து வியந்த கமல்: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் விக்ரம் மீரா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த கமல் யார் இந்த நடிகர் அவரை நேரில் பார்த்தாக வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். பின்பு விக்ரமை பார்த்த பின்பு வியந்து பாராட்டியுள்ளார். பின்பு ட்பபிங் ஆர்டிஸ்ட் என தெரிந்ததும், கமல் நடித்த குருதிப்புனல் படத்தில் டப்பிங் பேச விக்ரமை அழைத்திருக்கிறார். அதில், நடிகர் அர்ஜூனுக்கு டப்பிங் பேசவுள்ளதாக விக்ரம் நினைத்துள்ளார். பின்பு தீவிரவாதி ஒருவருக்கு விக்ரம் ட்பபிங் பேசியதாக விக்ரம் சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். அதேபோன்று விக்ரமும் கமல்ஹாசனும் பரமக்குடியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 லெஜண்ட் நடிகர்களும் தமிழ் திரையில் பண்ணாத சாதனைகளே இல்லை.
சொத்து மதிப்பு: இன்று விக்ரம் தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 200 கோடி முதல் 250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் குறைவா? திரையுலகில் அவரை எல்லோரும் செல்லமாக சியான்விக்ரம். ஆனால் அவரது பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்னும் அவரை கென்னி என்றே அழைத்து வருகிறார்கள். கென்னடி என்ற இயற்பெயரைத்தான் கென்னி என அழைக்கின்றனர். மேலும், தங்கலான் பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஒருவர் விக்ரமிற்கு ரசிகர்கள் குறைவா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விக்ரம், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுமே எனது ரசிகர்கள் தான். நான் தூள், சாமி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்பதற்காக தான் ராவணன் போன்ற பல படங்களில் நடித்தேன் என கூறி அசத்தலான பதிலை தந்தார் விக்ர்ம்.


Click it and Unblock the Notifications











