Pa Ranjith: மாளவிகாகிட்ட கொடூரமா நடந்துக்கிட்டேன்.. பா ரஞ்சித் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்து இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்த பேட்டிகளையும் படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் பிரமோஷனுக்காக விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, ஜிவி பிரகாஷ், ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

Vikram Thangalaan movie Pa Ranjith

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் அடுத்தடுத்து படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் இந்த படத்தின் தங்கலானே பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெயிலர் மற்றும் மினுக்கி மினுக்கி பாடல் வெளியான நிலையில் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கலான் படம்: இந்நிலையில் இந்த இந்த படத்தின் நடிகர்கள் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் தற்போது நடத்தப்பட்டுள்ளது. ஆங்கர் அர்ச்சனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் அனைவரும் படம் குறித்த அடுத்தடுத்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த படத்தின் வேலைகளை ரஜினிகாந்தின் காலா படத்தின் போதே தான் துவங்கியதாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் இந்த படம் உருவாகியதாகவும் இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சூட்டிங்கில் அழுத மாளவிகா: நடிகை மாளவிகா மோகனன் குறித்து தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தபோதிலும் படத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்த சூழலில் அதை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாகவும் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சிக்காக கம்பு சுழற்ற வேண்டிய மாளவிகா மோகனனுக்கு அது சரியாக வராத நிலையில் தன்னுடைய சந்தேகம் மேலும் அதிகரித்ததாகவும் ஆனாலும் தொடர்ந்து மாளவிகா பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பயிற்சி செய்ததால் அவருக்கு கையில் வலி ஏற்பட்டு அவர் அழுது விட்டதாகவும் பா ரஞ்சித் கூறியுள்ளார்.

கொடூரமாக நடந்துக் கொண்ட பா ரஞ்சித்: மாளவிகா இதுகுறித்து தன்னிடம் வெளிப்படுத்தாத நிலையில், தான் எப்படி இவ்வளவு கொடூரமாக அவரிடம் நடந்து கொண்டேன் என்று தனக்கு தெரியவில்லை என்றும் பா ரஞ்சித் மேலும் கூறியுள்ளார். இதனிடையே இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி மட்டுமே இந்த கேரக்டர்களில் செட் ஆவார்கள் என்றும் மற்ற நடிகர்கள் யாரும் இந்த கேரக்டர்களை தான் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே கோமணத்துடன் அதிகமான காட்சிகளில் நடித்ததாகவும் சுற்றிலும் பாறை மட்டுமே இருந்த நிலையில் மிகவும் கடினமாக சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகவும் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X