போட்டோகிராபராகவே மாறிய சியான்..தங்கலான் சூட்டிங் ஸ்பாட்டில் சுவாரஸ்யம்!

சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தன.

இந்தப் படங்களை அடுத்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம்.

தங்கலான் படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் விக்ரமின் தங்கலான்

நடிகர் விக்ரமின் தங்கலான்

நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படம் பீரியட் படமாக உருவாகி வருகிறது. கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

கோப்ராவின் கலவையான விமர்சனம்

கோப்ராவின் கலவையான விமர்சனம்

முன்னதாக விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் கதைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கெட்டப்பிற்கு கொடுத்ததால்தான் படம் தோல்வியடைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே அடுத்த மாதத்திலேயே வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் விக்ரம்.

மதுரையில் தங்கலான் சூட்டிங்

மதுரையில் தங்கலான் சூட்டிங்

இதனிடையே தற்போது உருவாகிவரும் தங்கலான் படத்தின் சூட்டிங் மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் வித்தியாசமான கெட்டப்புடன் விக்ரம் காணப்படும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தற்போது மதுரையில் படமாக்கப்பட்டு வருகின்றன. பாறைகள் நிறைந்த இடங்களில் இந்த சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

ரஞ்சித்தை புகைப்படம் எடுத்த விக்ரம்

ரஞ்சித்தை புகைப்படம் எடுத்த விக்ரம்

இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கின் இடையில், விக்ரமின் போட்டோகிராபிக் திறமை வெளிப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் ரஞ்சித்தை வித்தியாசமான பின்புலத்தில் தன்னுடைய கேமராமில் படம் பிடித்துள்ளார் விக்ரம். கையில் மைக்குடன் பா ரஞ்சித் இந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறார். அவர் தனது இயக்கத்தை மேற்கொண்டபோது இந்தப் புகைப்படத்தை விக்ரம் எடுத்துள்ளார்.

பீரியட் படமாக உருவாகும் தங்கலான்

பீரியட் படமாக உருவாகும் தங்கலான்

விக்ரமின் 61வது படமாக உருவாகிவரும் தங்கலான் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் மாளவிகா மோகனன். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படத்தில் மலையாள நடிகை பார்வதியும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருவது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கோலாரில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X