சிரிப்பை அடக்க முடியலை.. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பாராட்டிய நடிகர் விக்ரம்

சென்னை : இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தற்போது பிரிட்டிஷ் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை புகழ்ந்து விக்ரம் ட்வீட் செய்துள்ளார்

வா ராஜா வா என்றும் அவரை வரவேற்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் விக்ரம்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவரது மகான் படம் ஓடிடியில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக அஜய் இயக்கத்தில் வெளியான கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது.

சியான் 62 படத்தில் விக்ரம்

சியான் 62 படத்தில் விக்ரம்

தொடர்ந்து அவரது பொன்னியின் செல்வன் படம் கடந்த மாதத்தில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை விக்ரமிற்கு பெற்றுத் தந்துள்ளது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் 62 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

சிறப்பான போஸ்டர்கள்

சிறப்பான போஸ்டர்கள்

படம் கேஜிப் மக்களின் வாழ்க்கையை கூறும் பீரியட் படமாக உருவாகவுள்ளது. படத்தின் போஸ்டர்களில் மிரட்டலான லுக்குடன் விக்ரம் காணப்படுகிறார். இந்தப் படம் அவரது நடிப்புக்கு சிறப்பான தீனி போடும் படமாக கண்டிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களையும் இந்தப் படம் கண்டிப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

விக்ரம் புதிய பதிவு

விக்ரம் புதிய பதிவு

சமீபத்தில்தான் ட்விட்டரில் இணைந்தார் விக்ரம். தொடர்ந்து பொன்னியின் செல்வன் பிரமோஷன் உள்ளிட்டவற்றில் ட்விட்டரில் அடுத்தடுத்த பதிவுகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றைய தினம் பிரிட்டீஷ் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கின் வீடியோவை வெளியிட்டு விக்ரம் புதிய பதிவினை மேற்கொண்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர்

தீபாவளியன்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பிரிட்டனின் புதிய பிரதமராகியுள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். இவரின் தாத்தா, பாட்டி ஆகியோர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இங்கிருந்து ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று பின்பு இங்கிலாந்தில் குடியேறியவர்கள்.

ரிஷிக்கு எதிரான விமர்சனங்கள்

ரிஷிக்கு எதிரான விமர்சனங்கள்

இதனிடையே ரிஷி சுனக் வெள்ளையர் அல்லாத ஒருவர் என்று இங்கிலாந்தில் சிலர் எதிர்ப்பு தெவித்து வருகின்றனர். நிறவெறியை தூண்டும்வகையில் இவர்களது பேச்சுக்கள் வெளியாகி வரும்நிலையில், தி டெய்லி ஷோ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒருவரின் நிறத்தை வைத்து அவர்களின் திறமையை மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு பெருமை

இந்தியாவிற்கு பெருமை

இந்த வீடியோவைத்தான் தற்போது விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்தது முதல் தன்னுடைய சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் இதை பகிர வேண்டாம் என்றுதான் முதலில் நினைத்ததாகவும் இந்தியாவிற்கு இதன்மூலம் பெருமைதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வா ராஜா வா

வா ராஜா வா

மேலும் அமெரிக்காவின் குடியரசுத் துணை தலைவர் ஒரு இந்தியர் என்றும் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் முதல் பிரிட்டிஷ் பிரதமர் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள விக்ரம், வா ராஜா வா என்றும் வரவேற்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் ட்விட்டரில் இணைந்துள்ள விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான பதிவுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X