‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்

சென்னை : கர்ணன் திரைப்படத்தை பார்த்த நடிகர் விக்ரம் மாரி செல்வராஜின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டியுள்ளார்.

இணையத்தில் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சந்தோஷ் நாராயண் இசையில்

சந்தோஷ் நாராயண் இசையில்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் அட்டகாசமான நடிப்பில் கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வசூல் மழை

வசூல் மழை

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழுவினர் பெரிதும் அச்சம் அடைந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக கர்ணன் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

நல்ல விமர்சனம்

நல்ல விமர்சனம்

வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி, பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர் . தங்களது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

பாராட்டினார்

பாராட்டினார்

படத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜின் வீடு தேடிச் சென்று அவரை பாராட்டியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X