Thangalaan movie: 100 கோடி வசூலை தாண்டிய தங்கலான் படம்.. விக்ரம் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியானது தங்கலான் படம். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதிகளில் தங்க சுரங்கங்களில் வேலை செய்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார்.
தங்கலான் படத்தின் கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக்கி உள்ளது. இந்நிலையில் சில தினங்களிலேயே இந்த படம் தற்போது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது குறித்து நடிகர் விக்ரம், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக் குழுவினர் தங்களது உற்சாகத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தங்கலான் படம்: நடிகர் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகி மாஸ் காட்டி வருகிறது தங்கலான் படம். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை ஒட்டிய இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து கொண்டாடவும் செய்துள்ளது. இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில் அவரது மகுடத்தில் இந்த படம் மற்றொரு இறகாக இணைந்துள்ளது. படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை மிரட்டியுள்ளார். இந்த படத்திற்காக அவர் வழக்கம் போல மிகப் பெரிய அளவில் மெனக்கெட்டுள்ளார்.
மாஸ் காட்டும் தங்கலான்: விக்ரம் மட்டுமில்லாமல் இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் தங்களது நடிப்பால் மிகச் சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள நடிகர்களுக்கும் நடிக்கும் வாய்ப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அவர்களும் அதை சிறப்பாகவே பயன்படுத்தியுள்ளனர். படத்தின் கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளும் படத்திற்கு வலு சேர்த்த நிலையில் இசை அசுரன் ஜிவி பிரகாஷின் இசையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
100 கோடி கிளப்பில் தங்கலான்: இதனிடையே தங்கலான் படம் சில தினங்களிலேயே 100 கோடி கிளப்பில் தற்போது இணைந்துள்ளது. படக்குழுவினர் இதை கொண்டாடி வருகின்றனர். விக்ரம், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் இதை பதிவிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளன. நடிகர் விக்ரம் இந்தப்படம் மகத்தான காவியம் என்று பாராட்டியுள்ளார். மக்களின் நீதிக்கான வெற்றி என்றும் கூறியுள்ளார். படம் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் இந்தியிலும் ரிலீசாக உள்ளது. அதற்குள்ளாகவே இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

இந்தியில் ரிலீஸ்: இந்தியிலும் தங்கலான் படம் வெளியாகும் சூழலில் படத்தின் வசூல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமின் படங்களுக்கு தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில் அங்கும் தங்கலான் படம் மாஸ் கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











