கடைசி வரைக்கும் அந்த ஆசை மட்டும் நடக்கவே இல்லை.. விக்ரமுக்கா இந்த நிலைமை!
சென்னை : நடிகர் விக்ரம் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருபவர்.
தமிழ்ப் படங்களில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உள்ள விக்ரமின் நடிப்பில் நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். டீசர், ட்ரெயிலர், பாடல்களில் அவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் மகான், கோப்ரா படங்களை தொடர்ந்து நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியான நிலையில், விக்ரமின் கெட்டப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

மணிரத்னத்தின் கனவு
வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலையொட்டி, இந்தப் படம் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டராக உருவாகியுள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டப் படைப்பாக படம் உருவாகியுள்ளது. படத்தை லைகா மற்றும் தன்னுடைய மெட்ராஸ் டாக்கிஸ் மூலம் தயாரித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

பிரம்மாண்டமான உருவாக்கம்
இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதோடு, படத்தின் டீசர், பாடல்களும் பிரம்மாண்டமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் வெளியானது. தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் கலந்துக் கொண்டார்.

சிறப்பான பிரமோஷன்
இந்தப் படத்தின் பிரமோஷன்களும் இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றன. தொடர்ந்து படத்தின் நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டுவரும் பிரமோஷனல் டூரும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் துவங்கிய இந்த டூர் தற்போது டெல்லியில் நிலைக் கொண்டுள்ளது.

விக்ரமின் நிறைவேறாத ஆசை
மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். இடையில் படத்தின் நடிகர், நடிகைகள் பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விக்ரம் கொடுத்துள்ள பேட்டியில், ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேரும் தன்னுடைய ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜோடியாகும் விக்ரமின் கனவு
முன்னதாக விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்த ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஒருதலையாக காதலிப்பவராக நடித்திருப்பார் விக்ரம். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இருவரும் இணைந்துள்ளோம் ஆனாலும் ஜோடியாகும் கனவு இந்தப் படத்திலும் நிறைவேறவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











