Dhruva natchathiram: 8 நாட்களில் துருவ நட்சத்திரம்.. துப்பாக்கியை காட்டி விக்ரம் செய்த செயல்!
சென்னை: நடிகர் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் நவம்பர் 24ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான கேரக்டரில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.
நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த மல்ட்டி ஸ்டாரர் படமான பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. மல்ட்டி ஸ்டாரர் படமாக இருந்தபோதிலும் விக்ரமின் நடிப்பு இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளது.
தங்கலான் படம்: சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் மாஸ் காட்டியுள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படமும் 2024ல் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட தலைமுடி, தாடி, மீசை என விக்ரமின் மாறுபட்ட கெட்டப் படத்திற்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ நட்சத்திரம் படம்: இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் வரும் 24ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படம் வெளியாகவிருந்த சூழலில் பல்வேறு பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. படமும் கடந்த 2017ம் ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் தூசு தட்டப்பட்டு படத்தின் சூட்டிங்கை கௌதம் மேனன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
துருவ நட்சத்திரம் ப்ரமோஷன்கள்: இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களில் படக்குழுவினர் குறிப்பாக கௌதம் மேனன் அதிகமாக ஈடுபட்டுள்ளார். படத்தின் அடுத்தடுத்த பேட்டிகளை அவர் கொடுத்து வருகிறார். இந்தப் படத்தின் சிக்கல்களுக்கு தான் தான் காரணம் என்றும் அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படம் நீண்ட வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டதால் படம் பழைய படமாக இருக்கும் என்று அனைவரும் கருதியதாகவும் அவர் கூறியுள்ளார்.
விக்ரம் புதிய போஸ்டர்: இந்தப் பிரச்சினைகளில் இருந்து விலகி படத்தின் ரிலீசை அறிவித்துள்ளார் கௌதம் மேனன். இந்தப் படம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 8 நாட்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே தற்போது துப்பாக்கியுடன் விக்ரம் ஆக்ரோஷமான விளையாட்டு காண்பிக்கும் வகையில் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படம் குறித்து கௌதம் மேனன் நம்பிக்கை: இந்நிலையில் இந்தப் படம் துவங்கப்பட்டு அதிக ஆண்டுகள் ஆன போதிலும் படம் பழைய படமாக இருக்காமல் கதைக்களத்திலும் தொழில்நுட்பத்திலும் தற்போதைய படம் போலவே ரசிகர்களுக்கு சிறப்பான த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே படத்தின் அடுத்தடுத்த டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications