ரசிகர்களின் அன்பை பார்த்து வியந்து விட்டேன்..விக்ரம் உருக்கமான பேச்சு!
சென்னை : கோப்ரா டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம்,ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்து வியந்துவிட்டேன் என உருக்கமுடன் பேசியுள்ளார்.
Recommended Video
இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா. இப்படம் விநாயகர் சதுர்த்தி நாளான வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோப்ரா
சீயான் விக்ரம் பேசுகையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து, டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். கோப்ரா படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார். படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடந்து வருவதால், அவரால் இன்று இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை.

கற்பனை படைப்பு
இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. நாங்கள் அனைவரும் கோப்ரா படத்திற்காக கடுமையாக உழைத்து அவருக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து இருக்கிறோம். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. தடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 3ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

அளவிட முடியாது
திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது. அவர்கள் என் மீது வைத்து இருக்கும் அன்பை பார்த்து நானே வியந்து விட்டேன் என்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது என்றார்.

டீசர் வெளியீட்டு விழா
சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் கோப்ரா டீசர் வெளியீட்டு விழாவில், படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











