சேட்டா, கேட்டோ?... மிக நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாளத்தில் விக்ரம்!
சென்னை நடிகர் விக்ரம் மலையாளப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தயாராகும் ஸ்கெட்ச் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம்' படத்திலும், ஹரி இயக்கத்தில் சாமி 2' படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். இந்த இரு படங்களும் அடுத்த வருடம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.
இதில் சாமி 2' படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இந்நிலையில் அவரது தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் ரோஜாப்பூ என்ற படத்தில் நடிகர் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் பிஜு மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விக்ரம் நடிக்க இருப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











