Vikram: மலையாள இயக்குநருடன் கைக்கோர்க்கும் சியான்.. யாரு தயாரிப்பு தெரியுமா?

சென்னை: நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு கதைக்களம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக விக்ரம் எந்தப் படத்தில் கமிட்டாவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actor Vikram going to join for his Chiyaan62 movie with famous malayalam director Jude Anthany Joseph

சியான்62 படம் குறித்து வெளியான அப்டேட்: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி வரவேற்பை கொடுத்தன. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம் கோப்ரா படத்திலும் தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்திருந்தார். பல கெட்டப்புகளில் மிரட்டினார். ஆனால் படம் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது. கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே பொன்னியின் செல்வன் 2 படம் விக்ரம் நடிப்பில் வெளியானது. மல்ட்டி ஸ்டார் படமாக வெளியான இந்தப் படத்தில் தன்னுடைய இருப்பை சிறப்பாகவே பதிவு செய்திருந்தார் விக்ரம். படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி போன்றவர்கள் நடித்துள்ளனர். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக்களத்துடன் இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது வித்தியாசமான கெட்டப் குறித்த போஸ்டர்கள் வெளியாகி ட்ரெண்டானது.

இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது நடிகர் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டு, அதன்மூலம் சில வாரங்கள் சூட்டிங் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் வாரத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் ரிலீஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Actor Vikram going to join for his Chiyaan62 movie with famous malayalam director Jude Anthany Joseph

இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரமின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். எப்போதும் தன்னுடைய கதைத் தேர்வில் சிறப்பாக நடந்துக் கொள்வார் விக்ரம். அந்த வகையில் தங்கலான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் கண்டிப்பாக ஆஸ்கருக்கு செல்லும் என்று பிரபல தயாரிப்பாளர் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்ரமின் அடுத்தப்பட அறிவிப்பு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக 2018, ஓம் சாந்தி ஓசானா போன்ற படங்களை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் விக்ரம் தன்னுடைய அடுத்தப்படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம் மல்ட்டி ஸ்டார் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அறிவிப்பை லைகா வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் விக்ரமுடன், ராஷ்மிகா மந்தனா, விஜய் சேதுபதி, கிச்சா சுதீப் மற்றும் நிவின் பாலி என தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சியான்62 வாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் அனைவரும் முன்னணி நடிகர்களாக இருந்தபோதிலும் படத்தின் லீட் கேரக்டரில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் படம் தமிழ், உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X