Vikram :தோனியை பார்த்து வியந்தேன்.. தலயுடன் புகைப்படம் வெளியிட்ட சியான்!
சென்னை : நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாக உள்ளது.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விக்ரம் : நடிகர் விக்ரம் மிகவும் போராடியே தற்போது உள்ள நிலையை சினிமாவில் அடைந்துள்ளார். அவருக்கு சேது படத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர், தொடர்ந்து தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படம் போலவே மிகுந்த மெனக்கெடலுடன் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசான நிலையில், பொன்னியின் செல்வன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
இதையடுத்து இன்னும் சில தினங்களில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக அவர் நடித்துள்ள நிலையில், முதல் பாகத்தில் அதிகமான காட்சிகள் இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் அவர் இடம் பெற்றுள்ள காட்சிகள் மிரட்டலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
இந்தப் படத்திற்காக விக்ரம் 34 கிலோ வரையில் எடை குறைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் முன்னதாக பாராட்டு தெரிவித்திருந்தார். விக்ரமின் டெடிகேஷன் குறித்தும் பாராட்டியிருந்தார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் வரும் 17ம் தேதி விக்ரம் பிறந்தநாளையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக இயக்குநர் பா ரஞ்சித் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் இணைந்த விக்ரம், தொடர்ந்து ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தோனியுடன் தான் இருக்கும்படியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தோனியின் ஆட்டத்தை பார்த்து வியக்காமல் இருக்க முடியாது என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் சிஎஸ்கே -ஆர்ஆர் இடையிலான மேட்ச் சென்னையில் நடைபெற்ற நிலையில், சிஎஸ்கே இறுதிவரை போராடி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்த நிலையிலும் தோனியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இதை பாராட்டும்வகையிலேயே விக்ரம் தோனியுடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஆட்டத்தை பார்க்க த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் நேரில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











