Vikram :நீங்க ஒரு ராக்ஸ்டார் ரஞ்சித்.. தங்கலான் குறித்து உணர்ச்சிவசப்பட்ட விக்ரம்!
சென்னை : நடிகர் விக்ரம் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது தங்கலான் படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.
விக்ரம் பிறந்தநாளையொட்டி அவரது தங்கலான் படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ கிளிம்ப்சை படக்குழுவினர் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.
விக்ரம் பிறந்தநாளையொட்டி, திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பா ரஞ்சித்திற்கு விக்ரம் பாராட்டு : நடிகர் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். சேது படத்தில் துவங்கிய அவரது அதிரடிப் பயணம் தற்போது தங்கலான் படத்தில் நிலைகொண்டுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தான் எடுத்துக் கொள்ளும் கேரக்டருக்கு சிறப்பான வடிவத்தை கொடுப்பதில் டாப் மோஸ்ட் நாயகனாக விக்ரம் உள்ளார். சேது படத்தில் சியான் என்ற கேரக்டரில் அவர் நடித்த நிலையில், அந்தப் பெயராலேயே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
கடந்த ஆண்டில் கோப்ரா, பொன்னியின் செல்வன் என விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசான நிலையில், அதில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விக்ரம். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய படத்தின் பிரமோஷனல் டூரில் தற்போது படக்குழுவினருடன் இணைந்துள்ளார். முதல் கட்டமாக நேற்றைய தினம் கோயம்புத்தூரில் படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்துள்ளனர்.

விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் பா ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்துள்ளார். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பீரியட் படமாக தங்கலான் உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங் சென்னை, கேஜிஎப் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் சென்னையிலேயே அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்காக 34 கிலோ எடை குறைந்துள்ளார் விக்ரம். நீண்ட தலைமுடி, தாடியுடன் அந்த காலகட்டத்திய லுக்குடன் விக்ரமை பார்ப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் விக்ரம் பிறந்தநாளையொட்டி படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிரட்டலை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் தனது கெட்டப்பிற்காக மேற்கொண்ட அதீத முயற்சிகளும் இந்த வீடியோவில் தெரியவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு காட்சிக்கும் படக்குழுவினர் எத்தகைய மெனக்கெடல்களை மேற்கொண்டனர் என்பதும் மிகுதியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்காக விக்ரமிற்கு கண்டிப்பாக விருதுகள் குவியும் என்றும் பல்வேறு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தை இயக்கிவரும் பா ரஞ்சித் ஒரு ராக்ஸ்டார் என்று நடிகர் விக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்துக்களை பகிர்ந்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள விக்ரம், தன்னுடைய சந்தோஷத்தை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களுக்காக தன்னுடைய சிறிய பிறந்தநாள் வரிசு என்று தங்கலான் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கலான் படத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











