Vikram: தங்கலான் படத்தால மாளவிகா புரூஸ்லி தங்கச்சியாவே மாறிட்டாங்க.. விக்ரம் பகிர்ந்த சீக்ரெட்!

சென்னை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலகட்டத்தை ஒட்டிய கதைக்களத்தில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படம், அந்த காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் தங்க சுரங்கங்களில் வேலை செய்த தமிழர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் நடிகர் விக்ரம் வயதான மற்றும் இளைஞர் என இருவேறு கேரக்டர் லுக்கில் காணப்படுகிறார். இந்நிலையில் மாளவிகா மோகனனுக்கு இந்த படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் காணப்படுவதாகவும் அந்த கேரக்டருக்காக அவர் மிகப்பெரிய அளவில் தனக்கு தெரியாத விஷயங்களை எல்லாம் மிகுந்த பயிற்சியுடன் மேற்கொண்டதாகவும் நடிகர் விக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Vikram Thangalaan movie Malavika mohanan

தங்கலான் படம்: நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ளது தங்கலான் படம். இந்த படம் பல மாதங்களாக ரிலீசுக்கு சரியான நாள் பார்த்து வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் படத்தில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குனர் பா ரஞ்சித். எப்போதும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதை படமாக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருபவர் பா ரஞ்சித். அந்த வகையில் இந்த படமும் உணர்ச்சிகளின் கலவையாக அமைந்துள்ளதாக படத்தின் நடிகர், நடிகைகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தங்கலான் பட பிரஸ்மீட்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பிரமோஷன்களில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தங்கலான் படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய இன்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஈடுபட்டனர். இதில் பங்கேற்று பேசிய நடிகர் விக்ரம், பா ரஞ்சித், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் குறித்தும் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தார். இந்த படத்தில் மிகவும் கடினமான ஸ்பாட்டில் இருந்து கொண்டு அனைவரும் மிகவும் சிரமங்களுக்கு இடையில் நடித்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பார்வதி கேரக்டர்: கடுமையான பாறைகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் இந்த படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கேஜிஎஃப் குறித்த புத்தகத்தின் அடிப்படையில் இந்தப்படத்தை உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பா ரஞ்சித் முன்னதாக உருவாக்கியிருந்ததாகவும் ஆனால் ஸ்பாட்டில் உண்மை நிலையை பார்த்து, அதன் மூலம் மேலும் திரைக்கதையில் பல மாற்றங்களை ரஞ்சித் செய்துள்ளதாகவும் இந்த படம் ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்றும் விக்ரம் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தில் ஐந்து குழந்தைகளுக்கு அம்மாவாக பார்வதி நடித்துள்ளது குறித்தும் இது போன்ற ஒரு கேரக்டரை வேறு யாராலும் செய்து விட முடியாது என்றும் விக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாளவிகா கடுமையான பயிற்சி: இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனின் டெடிகேஷன் இந்த படத்தில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது குறித்தும் விக்ரம் தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் கேரக்டருக்கு மாளவிகாதான் சிறப்பான தேர்வு என்பதில் பா ரஞ்சித் மிகவும் உறுதியாக இருந்ததாகவும் ஆனால் அவர் இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் அது குறித்து அவருக்கு எதுவுமே தெரியாத நிலையில் இந்த படத்தில் மாளவிகா நடிக்க வந்ததாகவும் விக்ரம் கூறியுள்ளார். ஆனால் சிலம்பம் சுற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களை அவர் மிகவும் கடுமையான பயிற்சிகளுக்கு இடையில் மேற்கொண்டதாகவும் விக்ரம் தொடர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

புரூஸ்லி தங்கச்சி: ஷூட்டிங் ஸ்பாட்டில் தாங்கள் வேறு ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் மாளவிகா தொடர்ந்து சிலம்பம் சுற்றிக் கொண்டிருப்பார் என்றும் இதனால் அவரது கைகள் வீங்கி மிகவும் சிரமத்திற்கு இடையில் ஊருக்கு சென்ற நிலையிலும் அங்கும் தொடர்ந்து பிராக்டிஸ் செய்து அந்த கேரக்டராகவே அவர் தன்னை மாற்றிக் கொண்டதாகவும் விக்ரம், மாளவிகா மோகன் குறித்து தொடர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது அவர் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்து புரூஸ்லிக்கு தங்கச்சியாகவே மாறி விட்டதாகவும் விக்ரம் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X