Actor Vikram: எப்படி இதை செஞ்சீங்க.. ஜிவி பிரகாஷை பார்த்து மிரண்ட விக்ரம்!

சென்னை: நடிகர் விக்ரம் லீட் கேரக்டரில் நடித்துள்ள தங்கலான் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பா ரஞ்சித்.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படம் பீரியட் படமாக உருவாகியுள்ளது. படத்தில் மிரட்டலான லுக்கில் விக்ரமை பார்க்க முடிகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கலான் படம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு ஜனவரியில் ரிலீசாகவுள்ளது தங்கலான் படம். இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் சியான் முதியவர் மற்றும் இளைஞன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இதையொட்டி நீண்ட தலைமுடி, தாடியுடன் அவரை காண முடிந்தது.

Actor Vikram hails Music composer GV Prakash work in Thangalaan movie

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இசை அசுரன் என்று பெயர் வாங்கி சிறப்பான பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். முன்னதாக இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் டீசரும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களை மட்டுமில்லாமல் விக்ரமையும் மிகவும் அதிகமாக கவர்ந்துள்ளது.

மிரண்ட விக்ரம்: இந்த டீசரை பார்த்த விக்ரம், ஜிவி பிரகாஷுடன் 30 நிமிடங்கள் தொலைப்பேசியில் பேசியதாகவும் பாராட்டு தெரிவித்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். படத்தில் தன்னுடைய பிஜிஎம் சூப்பர் என பாராட்டிய விக்ரம், இதை எப்படி செஞ்சீங்க என்று மிரண்டதாகவும் ஜிவி பிரகாஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த மிரட்சியுடன் சியான் 62 படத்திலும் இசையமைக்க தன்னை கேட்டுக் கொண்டதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சியான் 62 படம்: இயக்குநர் அருண்குமாருடன் தன்னுடைய சியான் 62 படத்திற்காக இணைந்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் தங்கலான் படத்தை தொடர்ந்து சியான் 62 படத்திலும் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் தான் விக்ரமுடன் இணைந்துள்ளதற்கான காரணத்தை ஜிவி பிரகாஷ் தனது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

பன்முகம் காட்டும் ஜிவி பிரகாஷ்: நடிப்பு, இசையமைப்பு, தயாரிப்பு, பாடகர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட் வரை தன்னை வெளிப்படுத்தி வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அடியே படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ள நிலையில், அடுத்ததாக அனுராக் காஷ்யப்புடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இசையில் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் பாடல்கள் வெளியாகிவரும் நிலையில், அவர் முழுநேர இசையமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X