Sara Arjun :நிலா பாப்பா முதல் நந்தினி வரை.. சாரா குறித்து பெருமை தெரிவித்த விக்ரம்!

சென்னை : நடிகை சாரா அர்ஜுன் தெய்வத்திருமகள் படத்தில் நடிகர் விக்ரமுடன் குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

தொடர்ந்து சைவம், சில்லுக்கருப்பட்டி, சித்திரையில் நிலாச்சோறு, விழித்திரு உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும் சில இந்திப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களிலும் சாரா அர்ஜுன் நடித்துள்ளார்.

Actor Vikram hails Sara Arjun for her transformation from Nila to Nandini

சாரா அர்ஜுனுக்கு பாராட்டு தெரிவித்த விக்ரம் : நடிகை சாரா அர்ஜுன் தற்போது பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்களில் ஐஸ்வர்யா ராயின் டீன் ஏஜ் பருவ கேரக்டரில் நடித்து அனைவரையும் தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் கவர்ந்துள்ளார். முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்த சாரா அர்ஜூன் இரண்டாவது பாகத்தில் டைட்டில் காட்சிகளிலும் மேலும் சில காட்சிகளிலும் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இவரது கேரக்டர் தற்போது அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் நடிகர் விக்ரமுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சாரா. இந்தப் படத்தை ஏஎல் விஜய் இயக்கியிருந்த நிலையில், படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட கேரக்டரில் விக்ரம் நடித்திருந்த நிலையில், அவரது குழந்தையாக சாரா நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கிடையில் அழகான அப்பா -மகள் உறவு வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் மனநிலை சரியில்லாத கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை விக்ரம் பிரிவதாக காட்டப்பட்டிருக்கும். உணர்ச்சிப்பிழம்பாக விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருப்பார். அவருக்கு ஈடுகொடுத்து குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் சாராவும் நடித்திருப்பார். இந்நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் சாரா அர்ஜுன்.

Actor Vikram hails Sara Arjun for her transformation from Nila to Nandini

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பாகங்களில் சாரா அர்ஜுன் நடித்துள்ளார். இதையடுத்து விக்ரமுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சாரா அர்ஜுன், நிலா டூ நந்தினி, தெய்வத்திருமகள், பொன்னியின் செல்வன் 2, சியான் சார் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹார்ட்டின் எமோஜியையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த பதிவை ரீட்விட் செய்துள்ள விக்ரம், உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

இளம் பெண்ணாக பொன்னியின் செல்வன் படத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார் சாரா அர்ஜுன். தமிழில் அடுத்த இளம் ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்றே விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. குழந்தை நட்சத்திரமாகவே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து கவனம் பெற்ற இவர், பொன்னியின் செல்வன் படம் மூலம் கவனம் பெற்றுள்ளார். தொடர்ந்து ஒரு வலம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X