twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகான் படம் குறித்து விக்ரம் வருத்தம்: மகன் துருவ் விக்ரமுடன் நடித்த முதல் படமே இப்படி ஆகணுமா?

    |

    சென்னை: தமிழ்த் திரையுலகில் பலவருட போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் விக்ரம்.

    விக்ரம் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் திரைக்கு வர ரெடியாக உள்ளன.

    இந்நிலையில், விக்ரம் தனது மகன் துருவ்வுடன் இணைந்து நடித்த 'மகான்' படம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஆமா நாங்க லவ் பண்றோம்.. பப்ளிக்காக போட்டு உடைத்த நடிகர்கள்.. கியாரா அத்வானி திருமணம் எப்போ? ஆமா நாங்க லவ் பண்றோம்.. பப்ளிக்காக போட்டு உடைத்த நடிகர்கள்.. கியாரா அத்வானி திருமணம் எப்போ?

    சேது... ச்சியான்... விக்ரம்...

    சேது... ச்சியான்... விக்ரம்...

    சினிமாவையே தனது வாழ்நாள் கனவாக கொண்டிருந்த விக்ரமுக்கு, ஆரம்பத்தில் வெளியான படங்களில் சிறுசிறு வேடங்கள் மட்டுமே கிடைத்தன. மலையாளத்தில் 'என் காதல் கண்மணி', தமிழில் ஸ்ரீதர் இயக்கத்தில் 'தந்துவிட்டேன் என்னை' போன்ற படங்கள், சிறிய அறிமுகத்தை கொடுத்தன. கிட்டத்தட்ட 10 வருடங்கள் போராட்டத்திற்குப் பின்னர், பாலா இயக்கிய 'சேது' திரைப்படம், விக்ரமுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. அன்றுமுதல் அவர் ச்சியான் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

    தில், தூள், சாமி, ஜெமினி

    தில், தூள், சாமி, ஜெமினி

    சேது படத்தின் வெற்றியால். விக்ரம் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார், அதில் ஆக்சன் படங்களே அதிகமாக இருந்தன. அப்படி விக்ரம் நடிப்பில் வெளியான 'தில்', 'ஜெமினி', 'தூள்', 'சாமி' ஆகிய படங்கள், அவரை கமர்சியல் ஹீரோவாக அடையாளப்படுத்தியது. அதனால், விக்ரமின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இயக்குநர் ஷங்கருடன், 'அந்நியன்', 'ஐ', மணிரத்னம் இயக்கத்தில் 'ராவணன்' என மாஸ் காட்டினார்.

    கம்பேக் கொடுக்க வெயிட்டிங்

    கம்பேக் கொடுக்க வெயிட்டிங்

    சூப்பர் ஹிட் ஹீரோவாக கலக்கி வந்த விக்ரமின் சமீபத்திய படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இறுதியாக அவர் நடித்திருந்த 'ஐ' திரைப்படம், வசூலில் திருப்தி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெளியான, 10 எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. கடைசியாக விக்ரம் நடித்திருந்த 'மகான்' , நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது.

    விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்

    விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்

    விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படம், இம்மாத இறுதியிலும், 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் மாத இறுதியிலும் வெளியாகிறது. 3 வருடங்களுக்குப் பிறகு விக்ரமின் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், விக்ரம், இர்பான் பதான், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட 'கோப்ரா' பட குழுவினர், ரசிகர்களுடன் Twitter Space தளத்தில் கலந்துரையாடினர்.

    மகான் குறித்து வருத்தம்

    மகான் குறித்து வருத்தம்

    அப்போது பேசிய விக்ரம். "மகான், கோப்ரா பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் ஒரேதோற்றத்தில் நடித்தேன். அதனால் ஒவ்வொரு நடிப்பை வித்தியாசப்படுத்துவதில் சவால் இருந்தது. அதேநேரம் 'மகான்' திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டும். துருவ்வுடன் நான் இணைந்து நடித்த அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாதது இன்னும் வருத்தமாக உள்ளது" எனவும் கூறியுள்ளார். அமேசானில் வெளியான 'மகான்' படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vikram has expressed regret that his film Mahaan, in which he acted with his son Dhruv, was not released in theatres
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X