அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் திரைப்பிரபலங்கள்.. ரசிகர்கள் சோகம்!

சென்னை : நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Recommended Video

நடிகர் Vikram-க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! என்ன ஆனது ? *Kollywood | Filmibeat Tamil

நேற்று மாலையே அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோலிவுட்டின் சூப்பர் ஹீரோ

கோலிவுட்டின் சூப்பர் ஹீரோ

கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். தன்னுடைய அங்கீகாரத்திற்காக இவர் காத்திருந்தார். பல விஷயங்களை செய்து வந்தார். சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். டப்பிங் பேசினார். இவ்வாறு பல செயல்களில் ஈடுபட்ட இவருக்கு சிறப்பான படமாக அமைந்தது பாலாவின் சேது.

சிறப்பான சேது படம்

சிறப்பான சேது படம்

விக்ரமிற்கு மட்டுமில்லாமல் இயக்குநர் பாலாவிற்கும் சிறப்பான படமாக அமைந்தது சேது. சாதாரண காதல் படமாகவே அமைந்த இந்தப் படத்தில் விக்ரமின் மெனக்கெடல் படத்தை சிறப்பாக்கியது. இந்தப் படத்திற்காக அதிகமான கிலோ எடைக்குறைப்பில் ஈடுபட்டு சிறப்பாக நடித்திருந்தார். படம் வெளியானபோது இந்தப் படத்தை பார்த்துவிட்டு அழாமல் வெளியில் வந்தவர்கள் குறைவு.

வெறியுடன் கூடிய உழைப்பு

வெறியுடன் கூடிய உழைப்பு

அந்த அளவிற்கு சியான் என்ற அந்த கேரக்டரை சிறப்பாக்கியிருந்தார் விக்ரம். தொடர்ந்து கோலிவுட்டில் இந்தப் படம் கொடுத்த அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகளை பச்சக் என்று பற்றிக் கொண்டு முன்னேறினார். 40 வயது வரை தன்னை காக்க வைத்த சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க வெறியுடன் முன்னேறினார்.

வாய்ப்புகளை பயன்படுத்திய விக்ரம்

வாய்ப்புகளை பயன்படுத்திய விக்ரம்

தொடர்ந்து ஷங்கர் உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். தற்போது முன்னணி நடிகர்கள் வரிசையில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு. தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் அழுத்தத்தை கொடுத்து அதை சிறப்பாக்கி விடுவார் விக்ரம்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அவரது கோப்ரா படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாக உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இவ்வாறு அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ள நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக விக்ரம் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவர் நேற்று மாலையே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த நடிகர்கள் சிகிச்சை

அடுத்தடுத்த நடிகர்கள் சிகிச்சை

கடந்த சில வாரங்களில் நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் டி ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் விஜயகாந்தின் உடல்நிலையில் தொய்வு காணப்படுவதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்திருந்தார். இதேபோல டி ராஜேந்தர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.

ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் வேதனை

இந்நிலையில் தற்போது விக்ரமிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே கோலிவுட்டின் நடிகர்களுக்கு சிறப்பாக அமையவில்லை. அதிமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் -அஜித் படங்கள் சரியாக ஓடவில்லை. மற்ற மொழிப் படங்கள் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தின. இந்நிலையில் நடிகர்களின் உடல்நிலையும் ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X