PS2 :மறைமுகமாக சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு பேசிய விக்ரம்.. பொன்னியின் செல்வன் விழாவில் சுவாரஸ்யம்!
சென்னை : நடிகர்கள் கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 28ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் 2.
இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகமும் வெளியாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நேற்றைய தினம் படத்தின் ஆன்த்தம் வெளியான நிலையில், இன்றைய தினம் படத்தின் பிரமோஷனல் டூரை படக்குழுவினர் துவக்கியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 படம் :நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. வசூல்ரீதியாகவும் இந்தப் படம் மிரட்டியது. லைகா மற்றும் மணிரத்னத்தில் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்த நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் முதல் பாகத்திற்கே சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து வரும் 28ம் தேதி படத்தின் இரண்டாவது பாகமும் ரிலீசாக உள்ள நிலையில், முந்தைய பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகத்திற்கு அதிகமான பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் பாகத்திற்கு ஒரு மாதம் இருக்கும்போதுதான் பிரமோஷன்கள் துவங்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது பாகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பிரமோஷன்கள் சிறப்பாக செய்யப்பட்டன.
படத்தில் வந்தியத்தேவன், குந்தவை உள்ளிட்டவர்கள் கேரக்டர்கள் மாற்றம் குறித்த வீடியோக்கள் வெளியாகின. இந்த லுக்கிற்காக, கேரக்டர்களுக்காக பின்புலத்தில் உழைத்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த வீடியோக்கள் அமைந்திருந்தன. தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு சிறப்பம்சமும் ரசிகர்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டன. படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டில் பங்கேற்ற, படக்குழுவினர், படம் குறித்த தங்களது பல சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர்.
இதனிடையே நேற்றைய தினம் படத்தின் ஆன்த்தமை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டார். தொடர்ந்து படக்குழுவினர், முதல் பாகத்தின்போது மேற்கொண்டதை போலவே, இந்த படத்திற்கும் பிரமோஷனல் டூரை துவங்கியுள்ளனர். முதல்கட்டமாக கோயம்புத்தூருக்கு அவர்கள் சென்றுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் பொன்னியின் செல்வன் ஆன்த்தம் வெளியீட்டில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் விக்ரம், நடிகர் சிவகார்த்திகேயனை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மிர்ச்சி விஜய், விக்ரமை பாட சொல்லிக் கேட்டபோது, முன்னதாக இதேபோன்ற ஒரு மேடையில் தொகுப்பாளரை பார்த்து, அவர் மிகக்பெரிய நடிகராக மாறுவார் என்று கூறியதாகவும், அதேபோல அவர் தற்போது மிகப்பெரிய நடிகராக மாறியுள்ளதாகவும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார். அதேபோல மிர்ச்சி விஜய்யையும் குறிப்பிட நினைத்ததாகவும் ஆனால் அவர் பாட சொல்லி இம்சை செய்வதாகவும் விக்ரம் தெரிவித்தார்


Click it and Unblock the Notifications











