என்னால நடக்கவே முடியாது.. நடக்க ஆரம்பிச்சு நடிக்க ஆரம்பிச்சேன்.. இளைய தலைமுறைக்கு விக்ரம் அட்வைஸ்!

திருச்சி : நடிகர் விக்ரம் இன்றைய தினம் தனது கோப்ரா படத்தின் பிரமோஷனை திருச்சியிலிருந்து துவக்கியுள்ளார்.

Recommended Video

Myna Nandhini | தூங்கி எந்திருச்சு வந்ததால மறந்துட்டேன் | *INTERVIEW

கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விரைவில் புக்கிங்குகள் துவங்கவுள்ளன.

படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.\

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் எப்போதுமே கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக காணப்படுகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் சிறப்பான வெற்றிகளை கொடுத்து வருகின்றன. ஆனால் இதற்காக இவர் கடந்து வந்த பாதைகள், காத்திருப்புகள், மெனக்கெடல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இவை அனைத்துமே கடினமானவையாகவே இருந்தன.

அங்கீகாரம் கொடுத்த சேது

அங்கீகாரம் கொடுத்த சேது

ஆரம்பத்தில் சில காதல் கதைகளில் நடித்தாலும் அவை அனைத்தும் எந்தவிதமான அங்கீகாரத்தையும் கொடுக்காத நிலையில், தன்னுடைய பாதை இதுவல்ல என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார் விக்ரம். சேது என்ற படத்தில் பாலா இயக்கத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பச்சக் என பற்றிக் கொண்டார். அதுதான் அவரது கேரியரில் அவர் மேற்கொண்ட சரியான முடிவு.

இருவேறு கெட்டப்புகள்

இருவேறு கெட்டப்புகள்

இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் விக்ரம். என்ன சேது படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்தாரா என்று படம் பார்க்காதவர்கள் வேண்டுமானால் கேட்கலாம். ஆனால் படம் பார்த்தவர்கள் இதை கண்டிப்பாக ஒப்புக் கொள்வார்கள். அழகான கல்லூரி இளைஞனாகவும் மனநலன் பாதிக்கப்பட்டவராகவும் இருவேறு கெட்டப்பில் மிரட்டியிருப்பார் சியான்.

சியான் என்ற அடைமொழி

சியான் என்ற அடைமொழி

இந்தப் படத்தில் அவருக்கு கிடைத்த அங்கீகாரத்தின் அடையாளம், அந்தப் படத்தில் அவரது கேரக்டர் சியான் என்ற அடைமொழியோடு காணப்படும். அதுவே தற்போதுவரை விக்ரமின் மற்றொரு பெயராக தங்கிவிட்டது. விக்ரம் என்பதை காட்டிலும் இவரை சியானாக கொண்டாடவே ரசிகர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

கோப்ரா படம்

கோப்ரா படம்

தொடர்ந்து தன்னுடைய நடிப்பால் சாதாரண கேரக்டரையும் சிறப்பாக்கி வரும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ளது கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்தப் படம். இவரது முந்தைய படம் மகான் ஓடிடி ரிலீசாக வெளியான நிலையில் கோப்ரா திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

இந்தப் படத்திற்கு பிரமோஷனே தேவையில்லை என்பதுபோல இதன் போஸ்டர்கள் மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. அந்த வகையில் 20 கெட்டப்புகளில் விக்ரம் தோன்றும் இந்த போஸ்டர்கள் மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய போஸ்டர்களை மட்டுமே எதிர்பார்த்து படம் பார்க்க வரவேண்டாம் என்றும் அதையும் தாண்டி படத்தில் சென்டிமெண்ட் வேல்யூ அதிகமாக உள்ளதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோப்ரா பிரமோஷன்கள்

கோப்ரா பிரமோஷன்கள்

இந்நிலையில் இன்றைய தினம் கோப்ரா படத்தின் பிரமோஷனுக்காக திருச்சி சென்ற சியான், ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தார். தொடர்ந்து அதிகரித்துவரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்தும் பிரத்யேகமான மெசேஜ் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். மாணவர்கள் தங்களுடைய படிப்பு குறித்த பிரஷரை தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவர்களின் தற்கோலை முடிவு

மாணவர்களின் தற்கோலை முடிவு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் தனித்திறமை இருக்கும் என்றும் அதில் ஷைன் ஆக முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களின் இலக்குகளை இளைஞர்கள் எளிதில் விட்டுவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நம்மால் முடியும் என்ற மனவலிமையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நடக்க முடியாத நான் நடித்தேன்

நடக்க முடியாத நான் நடித்தேன்

தன்னால் ஒரு காலகட்டத்தில் நடக்கவே முடியாது என்றும் தான் நடக்க ஆரம்பித்து நடிக்கவும் துவங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதை மற்றவர்களும் பின்பற்றலாம் என்றும் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கோப்ரா படத்தின் பிரமோஷனையொட்டி ஒவ்வொரு ஊராக செல்லவுள்ள விக்ரம், இன்று மாலை மதுரைக்கு செல்லவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X