பாம்பே படத்தை நழுவவிட்ட விக்ரம்.. இதுதான் காரணமா.. அவரே சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விக்ரம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்ற நடிகராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார். இவர் தனது படங்களுக்காகவும் கேரக்டர்களுக்காக செய்யும் மெனக்கெடல்கள் யாராலும் நினைத்து பார்க்க முடியாதவை. இந்திய அளவில் ஒரு சில நடிகர்களே இதுபோன்ற சம்பவங்களை சாத்தியப்படுத்துகின்றனர்.

விக்ரம் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள தங்கலான் படத்திலும் விக்ரமின் கெட்டப் மிரட்டியது. இந்த கேரக்டரை இவரை விட யாராலும் சிறப்பாக்கிவிட முடியாது என்ற பாராட்டுக்களை இவர் பெற்றுள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த மாதம் 15ம் தேதி இந்தப்படம் வெளியான நிலையில், இன்னும் சில தினங்களில் இந்தியில் ரிலீசாகவுள்ளது.

vikram maniratnam

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் பல ஆண்டுகளாக கோலிவுட்டில் மாஸான நடிகராக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். கடந்த 1990ம் ஆண்டில் என் காதல் கண்மணி படம் மூலம் கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமானார் விக்ரம். தொடர்ந்து காதல் கதைகளே இவருக்கு கிடைக்க, ஒரு கட்டத்தில் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த சேது படம் மிகப்பெரிய ஓபனிங்கை இவரது கேரியரில் கொடுத்தது. இந்தப் படத்தில் இவரது கேரக்டருக்கு இருந்த புனைப்பெயர் சியானே இவரது அடையாளமாகவும் மாறியது. தற்போதுவரை சியான் விக்ரமாகவே இவர் கொண்டாடப் படுகிறார்.

தங்கலான் படம்: எங்கிருந்துதான் விக்ரமிற்கு இவ்வளவு எனர்ஜி இருக்குமோ என்று அனைவரும் சந்தேகம் எழுப்பும்வகையில், தான் ஏற்கும் கேரக்டர்களை மிகச்சிறப்பாக மாற்றி விடுவார் விக்ரம். அந்த வகையில் இவரது கேரியர் பெஸ்டாக ஐ, ராவணன் தற்போது வெளியாகியுள்ள தங்கலான் போன்ற படங்களை சுட்டிக் காட்டலாம். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இவரது நடிப்பில் தங்கலான் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் மட்டுமே ரிலீசானது. இன்னும் சில தினங்களில் தங்கலான் இந்தியிலும் ரிலீசாகவுள்ளது.

பாம்பே படத்தில் நடிக்கும் சான்ஸ்: இதையொட்டி, பார்வதி, பா ரஞ்சித் உள்ளிட்ட டீமுடன் விக்ரம் மும்பையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் பாம்பே படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தான் தவறவிட்டது குறித்து தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் விக்ரம். அந்தப் படத்தின் ஆடிஷனில் கலந்துக் கொண்ட நிலையில், கடைசிகட்ட ஆடிஷனில் தான் சொதப்பியதாக விக்ரம் கூறியுள்ளார். மணி சார் கையில் ஸ்டில் கேமரா இருந்தநிலையில், அவர் தன்னை நிறுத்தாமல் நடிக்க சொன்னதாகவும் ஆனால் அவர் கையில் வீடியோ கேமரா இல்லாததால் தான் குழம்பி நடிக்காமல் விட்டு விட்டதாகவும் விக்ரம் கூறியுள்ளார்.

மணிரத்னம் -விக்ரம் காம்பினேஷன்: இதனால் தான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் அவருடன் இணைந்து நடிப்பது தன்னுடைய கனவாக இருந்த நிலையில், இதை நினைத்து தான் 2 மாதங்கள் அழுதுக் கொண்டிருந்ததாகவும் விக்ரம் கூறியுள்ளார். பாம்பே படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இந்தப் படத்தை இழந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன், பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களில் விக்ரம் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X