பொண்டாட்டி ஓடி போயிட்டாங்களா.. பத்திரிகையாளரை பார்த்து விக்ரம் கேட்ட முகம் சுளிக்க வைக்கும் கேள்வி!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக தங்கலான் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பறந்து பறந்து பிரமோஷன்களில் தங்கலான் டீம் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீடும் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Vikram Thangalaan movie tamil cinema

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துவங்கப்பட்ட நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை என அடுத்தடுத்த இடங்களில் ரசிகர்களையும் பத்திரிகையாளர்களையும் இந்த டீம் சந்தித்து வருகிறது.

தங்கலான் படம்: முன்னதாக ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் இந்தப் படத்தின் பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இநத்ப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை மையமாக கொள்ளப்பட்டுள்ளது. தங்க சுரங்கங்களில் வேலை செய்த தமிழர்களின் வாழ்வியல் இந்தப் படத்தில் மையமாக கொள்ளப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தின் திரைக்கதையை பா ரஞ்சித் மேற்கொண்டுள்ளார்.

தங்கலான் பிரஸ்மீட்: இந்தப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த இடங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளை எதிர்கொண்டு வருகிறது தங்கலான் டீம். இதனிடையே ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்துவரும் சூழலிலும் அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள், விக்ரமிற்கு இல்லாத சூழல் காணப்படுவது குறித்து கேள்வி விக்ரமிடம் எழுப்பப்பட்டது. டென்ஷன்படுத்தும் இந்த கேள்விக்கும் கூலாக பதிலளித்தார் விக்ரம். தன்னுடைய ரசிகர்கள் பட்டாளம் குறித்து தியேட்டரில் சென்று பார்க்கும்படி அவர் கூறினார். டாப் 3யில் அவரது ரசிகர்கள் வட்டம் இல்லையே என்ற கேள்விக்கு டாப் 3, டாப் 4 போன்றெல்லாம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

டென்ஷன் படுத்திய கேள்வி: தொடர்ந்து தனக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஜெனரல் ஆடியன்சும் உள்ளதாகவும் விக்ரம் கூறியுள்ளார். இதனிடையே மற்றொரு பத்திரிகையாளர் குறிப்பிட்டு டாப் நடிகர்களுக்கு ஹேட்டர்ஸ் உள்ளதாகவும் ஆனால் விக்ரமிற்கு அதுபோல யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து உற்சாகமடைந்த விக்ரம், அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தான் ஏற்கனவே பெரிய லெவலுக்கு வந்துவிட்டதாகவும் தூள், சாமி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்துள்ளதாகவும் ஆனால் தொடர்ந்து சினிமாவில் மாற்று முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் பலனாகத்தான் தற்போது தங்கலான் உருவாகியுள்ளதாகவும் விக்ரம் மேலும் கூறியுள்ளார்.

விக்ரமின் முகம் சுளிக்க வைத்த கேள்வி: இதனிடையே தன்னை கேள்வி கேட்ட பத்திரிகையாளர் யாருடைய ஃபேன் என்று கேள்வி எழுப்பிய விக்ரம், தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய பெற்றோர் தான் தனக்கு பிடித்த நடிகர்கள் என்று கூறினார். இதையடுத்து விக்ரம் அவரது மனைவி குறித்து ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார். பொண்டாட்டி ஓடிப் போயிட்டாங்களா என்றும் விக்ரம் கேள்வி எழுப்பியதையும் பார்க்க முடிந்தது. இன்னும் திருமணமாகாததால்தான் அவர் இத்தகைய கேள்விகளை கேட்பதாகவும் விக்ரம் தொடர்ந்து பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X