என்னது இந்த கூட்டணி 8 வருஷமா காத்திருந்துச்சா? முன்னமே சேர்ந்திருக்கணும்!
சென்னை :நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள மகான் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து அவரது அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மகான் படம்
நடிகர் விக்ரம் பல சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் உருவான படம் மகான். இந்தப் படத்தில் தனது மகன் துருவ் விக்ரம், சிம்ரன், சிம்ஹா உள்ளிட்டவர்களுடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.

வெற்றிப் படம்
இந்தப் படம் நேற்றைய தினம் நேரிடையாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படத்தை இயக்கியுள்ளார் கார்த்தி சுப்புராஜ். இவரது முந்தைய படம் ஜகமே தந்திரம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பா ரஞ்சித் -விக்ரம் கூட்டணி
இந்நிலையில் நடிகர் விக்ரம் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் இந்த மெகா கூட்டணி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இணையவிருந்தது.

8 ஆண்டு காத்திருப்பு
மெட்ராஸ் படம் ரிலீசுக்கு அடுத்ததாகவே ரஞ்சித், விக்ரமை சந்தித்து கதை கூறி ஓகே வாங்கியுள்ளார். அப்போது ரஜினியின் கபாலி பட வாய்ப்பு கிடைத்ததால் விக்ரமை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கைகூடாமல் போயுள்ளது. தொடர்ந்து காலா, சார்பட்டா பரம்பரை என்று ரஞ்சித் பிசியாகி விட்டதாலும் இந்த கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போனது.

விரைவில் சூட்டிங்
தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கி முடித்துள்ள ரஞ்சித், அதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார். இதேபோல விக்ரமின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் விக்ரமை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான காம்பினேஷன்
விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பு சூறாவளி விக்ரம், ரஞ்சித் இயக்கத்தில் இணைந்தால் அது சிறப்பான காம்பினேஷனாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications











