இரு தினங்களில் துவங்கும் விக்ரம் படம்.. யாரு ஹீரோயின் தெரியுமா?

சென்னை : சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை தொடர்ந்து அடுத்ததாக விக்ரமுடன் அவரது சியான் 61 படத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித்.

இந்தப் படத்தின் பூஜை பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே போடப்பட்டது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கையோடு இந்தப் படத்தின் பூஜையில் கலந்துக் கொண்டார் விக்ரம்.

 இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என தனது அடுத்தடுத்த படங்களை இயக்கி வெளியிட்டார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். இந்தப் படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஆர்யா இயக்கத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படம் பீரியட் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வித்தியாசமான கதைக்களம்

வித்தியாசமான கதைக்களம்

தொடர்ந்து சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை அணுகியது. பெரிய படங்களுடன் வெளியான நிலையிலும், பிரத்யேகமான கதைச்சொல்லலால் இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் பெற்றுள்ளது. தைரியமாக இத்தகைய கதைக்களத்தை கையில் எடுத்த பா ரஞ்சித்திற்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

விக்ரமுடன் இணையும் பா ரஞ்சித்

விக்ரமுடன் இணையும் பா ரஞ்சித்

தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வரும் பா ரஞ்சித், தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார். இதனிடையே தன்னுடைய அடுத்தப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார் பா ரஞ்சித்.

மீண்டும் பீரியட் படம்

மீண்டும் பீரியட் படம்

இந்தப் படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதத்திலேயே துவங்கிய நிலையில், இன்னும் இரு தினங்களில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படமும் சார்பட்டா பரம்பரை போலவே பீரியட் படமாகவே உருவாகவுள்ளது.

கேஜிஎப் மக்களின் வாழ்க்கை

கேஜிஎப் மக்களின் வாழ்க்கை

கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாக பா ரஞ்சித் அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் படம் 3டியில் உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

19வது நூற்றாண்டு கதை

19வது நூற்றாண்டு கதை

19வது நூற்றாண்டில் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா விக்ரமின் ஜோடியாக இணையவுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தற்போது படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X