கடப்பா உனக்கு மடப்பா எனக்கு.. இரு தினங்களில் துவங்கும் சியான்61 பட சூட்டிங்!
சென்னை : நடிகர் விக்ரமின் நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்த படங்கள் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் வெளியானது.
இதில் கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் அவருக்கு இந்த ஆண்டின் சிறப்பான படமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தனது அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்டார் விக்ரம். இரு தினங்களில் அவரது சியான் 61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை வித்தியாசமான கதைக்களங்களில் கொடுத்து வருகிறார். அவரது மகான் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்திருந்தனர்.

கோப்ரா படத்தின் கலவையான விமர்சனங்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் கோப்ரா படத்திலும் விக்ரம் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூலிலும் சொதப்பியது. இந்தப் படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவரத் தவறிவிட்டதாக கூறப்பட்டது. கெட்டப்பில் காட்டிய வேகத்தை படத்தின் திரைக்கதையில் காட்ட இயக்குநர் தவறியதாகவும் கூறப்பட்டது.

பாராட்டுக்களை பெற்ற விக்ரம் நடிப்பு
ஆனால இந்தப் படத்தின் விக்ரமின் நடிப்பு சிலாகிக்கப்பட்டது. அவரை ரசிகர்கள் கொண்டாடினர். தன்னுடைய பங்கை அவர் சிறப்பாக செய்ததாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே அடுத்ததாக வெளியான பொன்னியின் செல்வன் படம் விக்ரமிற்கு மிகச்சிறப்பாக அமைந்தது.

ஆதித்த கரிகாலனாக மிரட்டல்
ஆதித்த கரிகாலனாக அவர் நடித்திருந்த நிலையில், படத்திற்கு அவர் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ள நிலையில், அதிலும் விக்ரமின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் தற்போதே தயாராகிவிட்டனர்.

பா ரஞ்சித்துடன் கூட்டணி
இதனிடையே அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் பூஜை பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு முன்னதாகவே நடந்த நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்த சூட்டிங் கடப்பாவில் நடைபெறவுள்ள நிலையில், படக்குழு அங்கு செல்லவுள்ளனர்.

விரைவு படுத்தப்படும் சூட்டிங்
அங்கு சில தினங்கள் முதல்கட்ட சூட்டிங் நடத்தப்படவுள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கும் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கிற்கும் பூஜைக்கும் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் சூட்டிங்கை முடிக்கவும் பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இந்தப்படத்தின் லுக் டெஸ்ட்டையும் முடித்துள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











