புஷ்பானா பிளவருனு நினைச்சியா?அந்நியனாக மாறி மேடையில் தெறிக்க விட்ட விக்ரம்!
சென்னை : அல்லு அர்ஜூன் படத்தில் வரும் மாஸ் டையலாக்கான புஷ்பானா பிளவருனு நினைச்சியா? வசனத்தை அந்நியனாக மாறி மாறி பேசி மேடையில் தெறிக்க விட்டார் விக்ரம்.
Recommended Video
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படம் விநாயகர் சதுர்த்தி நாளான வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
படத்தின் புரமோஷனுக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ரசிகர்களை சந்தித்து நடிகர் விக்ரம் உரையாடி வருகிறார்.

கோப்ரா
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மிர்னாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர் விக்ரம் வருகைக்காக ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஆடல் ஆடியபடியும், பாடல் பாடியபடி காத்திருந்தனர்.

மாணவர்களுடன் கலகலப்பான பேச்சு
இதனையடுத்து கல்லூரிக்கு வருகை தந்த நடிகர் விக்ரம் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் கடும் நெரிசலில் சிக்கியபடி வருகை தந்தார். இதையடுத்து, மாணவர்களின் நடிகர் விக்ரம் கலகலப்பாக பல கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமா? என்று கேட்ட கேள்விக்கு நான் எப்போதும் ரசிகர்களின் செல்லம் தான் என்றார்.

புஷ்பானா பிளவருனு நினைச்சியா?
சினிமாவிற்கு வருவது கடினமா? எளிமையா? என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், சினிமாவிற்கு வருவது மிகுந்த கடினமானது இருந்தாலும் விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வரலாம் என்றார். மேலும், விக்ரமின் தீவிர ரசிகை ஒருவர் அல்லு அர்ஜூன் படத்தில் வரும் மாஸ் டையலாக்கான புஷ்பானா பிளவருனு நினைச்சியா? புஷ்பானா ஃபயரு என வசனத்தை பேசும் படி கேட்டார்.

அந்நியனாக மாறிய விக்ரம்
ரசிகையின் கோரிக்கையை ஏற்ற விக்ரம் அந்நியனாக மாறி புஷ்பானா பிளவருனு நினைச்சியா? என 9 விதமான மாடிலேஷனில் பேசி அனைவரையும் அசத்தினார். அவர் பேச பேச கை தட்டலும், விசில் சத்தமும் காதை பிளந்தது, இதையடுத்து, ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் நடிகர் விக்ரம் நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

3 ஆண்டுகளுக்குப்பிறகு
மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு பிறகு திரையரங்கில் கோப்ரா படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை காண ஆர்வமாக உள்ளனர். விக்ரமின் முந்தைய படமான மகான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











