கோப்ரா சூட்டிங்கை நிறைவு செஞ்சிட்டாரு சியான்... விரைவில் ரிலீஸ் அப்டேட்

சென்னை : நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் கோப்ரா.

இந்தப் படம் நீண்ட காலமாக சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

படத்தின் பட்ஜெட் எகிறியுள்ளதால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இடையில் சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், அடுத்ததாக நீண்ட காலங்களாக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள கோப்ரா படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் லலித்குமார் தயாரிப்பில் கடந்த 2019ல் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதப்பட்டது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

எகிறிய பட்ஜெட்

எகிறிய பட்ஜெட்

படம் இவ்வாறு நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு வருவதால் படத்தின் பட்ஜெட் எகிறியுள்ளது இதையடுத்து சமீபத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் அது தீர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

சூட்டிங்கை நிறைவு செய்த விக்ரம்

சூட்டிங்கை நிறைவு செய்த விக்ரம்

இந்நிலையில் படத்தில் விக்ரமின் போர்ஷன் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். படத்தில் மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். அவருக்கு டஜனுக்கும் அதிகமான கெட்டப்புகள் படத்தில உள்ளதாம்.

 விரைவில் ரிலீஸ் அப்டேட்

விரைவில் ரிலீஸ் அப்டேட்

படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கனிகா, மிருணாளினி ராவ், மும்முக்கோயா, ரேணுகா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சியானின் மகான் படம் அடுத்ததாக ரிலீசாக உள்ள நிலையில் கோப்ரா படத்தின் ரிலீசையும் எதிர்பார்க்கலாம்.

வித்தியாசமான கெட்டப்

வித்தியாசமான கெட்டப்

விக்ரமிற்கு எப்போதுமே சவாலான கேரக்டர்களை செய்வதில் ஆர்வம் அதிகம். இதற்கு அவரது பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் கோப்ரா படமும் அவரது கேரியரில் சிறப்பான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X