For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் மட்டுமில்ல.. ஜகமே தந்திரம் படத்துக்காக காத்திருக்கும் பிரபல நடிகர்!

    |

    சென்னை: ஜகமே தந்திரம் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ப்பா.. வெஸ்டர்ன் டான்ஸரை போல் ஆட்டம் போடும் சுரேஷ் தாத்தா.. வைரலாகும் வீடியோ! ப்பா.. வெஸ்டர்ன் டான்ஸரை போல் ஆட்டம் போடும் சுரேஷ் தாத்தா.. வைரலாகும் வீடியோ!

    நடிகர் கலையரசன் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வரும் ஜூன் மாதம் ரிலீஸ்

    வரும் ஜூன் மாதம் ரிலீஸ்

    சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜகமே தந்திரம் படம் இன்று நெட்டிஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

    190 நாடுகளில் ரிலீஸ்

    190 நாடுகளில் ரிலீஸ்

    தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மொத்தம் 17 மொழிகளில் 190 நாடுகளில் ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு #JagameThandhiramOnNetflix என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் நேற்று முதலே கொண்டாட தொடங்கி விட்டனர்.

    விக்ரம் பிரபு வாழ்த்து

    விக்ரம் பிரபு வாழ்த்து

    இந்நிலையில் பிரபல நடிகரான விக்ரம் பிரபுவும் ஜகமே தந்திரம் படத்தை காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இன்று ரிலீஸ் ஆகும் ஜகமே தந்திரம் திரைப்படம் மற்றும் அதன் ஹீரோவான தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விக்ரம் பிரபு வெய்ட்டிங்

    விக்ரம் பிரபு வெய்ட்டிங்

    மற்றொரு டிவிட்டில் நெட்டிஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகவுள்ள ஜகமே தந்திரம் படத்தை காண எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் மற்றும் மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்ரம் பிரபு.

    English summary
    Actor Vikram Prabhu eager to watch Jagame Thandhiram. He has conveyed his wishes to the entire team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X