டாணாக்காரன் தந்த விக்ரம் பிரபுவா இப்படி.. இவரும் கத்தியை தூக்க ஆரம்பிச்சுட்டாரே!
சென்னை :நடிகர் விக்ரம் பிரபு கோலிவுட்டில் தன்னுடைய இருப்பை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டாணாக்காரன் இவருக்கு சிறப்பாக அமைந்தது. நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் இவரது அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கும்கி நாயகன்
கும்கி என்ற படத்தில் அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பிற்காக சிறப்பான விமர்சனங்களை பெற்றவர் விக்ரம் பிரபு. நடிகர் சிவாஜி வீட்டின் வாரிசாக நடிக்கவந்த இவர் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் தன்னை கோலிவுட்டில் முன்னணி நடிகராக நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சிறப்பான படங்கள்
இவரது கும்கி படம் கொடுத்த சிறப்பான வெற்றியை இவரது மற்ற படங்கள் கொடுக்க தவறின. வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்கள் இவருக்கு கைக்கொடுத்தது. தொடர்ந்து சிறப்பான கதைக்களில்தான் நடித்து வருகிறார். ஆனாலும் ஆவரேஜ் நடிகர்கள் வரிசையில்தான் உள்ளார்.

சிறப்பான டாணாக்காரன் தந்த விக்ரம் பிரபு
சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான டாணாக்காரன்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. காவல் பணியில் இணைபவர்கள் படும் துயரங்கள், காவல்துறை பயிற்சி என்கிற போர்வையில் மனிதாபிமானம் மீறப்படுவதையும் படம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது. விக்ரம் பிரபு காவலர் பயிற்சியில் ஈடுபடும் போலீஸாக அற்புதமாக நடித்திருந்தார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியானது. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் கந்தன் மாறன் என்ற கதாபாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார்.

ரெய்ட் படம்
இந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கு ரெய்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார்.

ரெய்ட் பர்ஸ்ட் லுக்
படத்திற்கு இயக்குநர் முத்தையா திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பிரபு தனது கையில் ரத்தம் தோய்ந்த வாளுடன் காணப்படுகிறார். அவருக்கு முன்பு காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட சிலர் காணப்படுகின்றனர். விக்ரம் பிரபுவின் முகத்திலும் காயங்கள் காணப்படுகின்றன.

ரத்தம் தோய்ந்த வாள்
சமீப காலமாக ரத்தம், அரிவாள், வன்முறைப்படங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு வரும் வரவேற்பு, வசூலை அடுத்து பலரும் அதே பாதையை பின்பற்றுகின்றனர். ஜெய்பீம் போன்ற தரமான படங்களை கொடுத்த சூர்யா கூட விக்ரம் படத்தில் போதைபொருள் கும்பல் தலைவனாக நடித்தார், இதே பாதையில் டாணக்காரன் போன்ற படங்கள், இயல்பான கதைக்களங்கள் அல்லது காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த விக்ரம் பிரபுவும் தற்போது இந்த பள்ளத்தில் வீழ்ந்துள்ளார், இது சரியா? எல்லாம் படவசூலுக்காக செய்யும் அட்ஜெஸ்ட்மெண்ட் என விமர்சனம் எழுந்துள்ளது.

மீண்டும் ஸ்ரீதிவ்யா
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. படத்திற்கு ரெய்ட் என்றறு தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் வெள்ளைக்கார துரை படத்திற்கு பிறகு ஸ்ரீதிவ்யா விக்ரம் பிரபுவிற்கு மீண்டும் ஜோடியாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











