மிரட்டல் லுக்கில் விக்ரம் பிரபு.. வெளியானது டாணாக்காரன் ஃபர்ஸ்ட லுக்!
சென்னை: விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் டாணாக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம் பிரபு.
அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் புலிகுத்தி பாண்டி. முத்தையா இயக்கத்தில் உருவான இப்படம் தொலைக்காட்சியில் நேரடியாக ரிலீஸ் ஆனது.

டாணாக்காரன்
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் "டாணாக்காரன்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதாப்பாத்திரம்
தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

மிரட்டல் லுக்..
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் மிலிட்டரி கெட்டப்பில் உள்ளார் விக்ரம் பிரபு. மேலும் பின்னணியில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற கெட்டப்பிலும் உள்ளார் விக்ரம் பிரபு.


Click it and Unblock the Notifications











