ஜாக்கிரதையா இருங்க.. அன்புக்குரியவர்களை பத்திரமா பாத்துக்குங்க.. நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்!
சென்னை: பாதுகாப்பாய் இருங்கள் அன்புக்குரியவர்களை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள் என நடிகர் விக்ரம் பிரபு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஊரடங்கு அறிவிப்பு
இதனால் பல மாநில அரசுகள் செய்வதறியாது விழி பிதுங்கி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு உருக்கம்
கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சினிமா நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபு மக்கள் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என உருக்கமாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கற்பனைக்கும் சக்திக்கும் மீறி
இதுதொடர்பான அவரது பதிவில், தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். நம்முடைய கற்பனைக்கும் சக்திக்கும் மீறிய விஷயங்களை நிஜத்தில் சந்தித்து வருகிறோம். இந்த பூமியையும் அதில் உள்ள மக்களையும் மதியுங்கள். இது உங்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

ஜாக்கிரதையாய் இருங்கள்..
உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் உங்களின் அன்புக்குரியவர்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் பார்த்துக்கொள்ள முடியும். மனசு விளையாடலாம்.. நண்பர்களுடன் பேசுங்கள், வரும் முன் தடுப்பதே நல்லது. அதை நிஜத்திலும் பார்க்கிறோம். ஜாக்கிரதையாய் இருங்கள்.. இந்த நேரத்தை கடந்து வந்து விடுவோம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











