twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீயான் விக்ரம் பிறந்தநாள்... ரத்த தானம் கொடுத்துக் கொண்டாடிய ரசிகர்கள்!

    விக்ரமின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் சந்தோஷத்துடன் கொண்டாடினர். அதிலும் ரத்த தான முகாம் அமைத்து, ரத்த தானம் கொடுத்து சிறப்பாகக் கொண்டாடினர்.

    By Suganthi
    |

    சென்னை: நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கட் அவுட், பலாபிஷேகம் என பிறந்தநாளைக் கொண்டாடாமல், அவரது ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்தனர்.

    இன்று நடிகர் விக்ரம் பிறந்தநாள். அவரது பிறந்தநாளை, ரசிகர்கள் கோலகலமாகக் கொண்டடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் அன்று ரசிகர்கள் ரத்த தான முகாம் நடத்துவார்கள்.

     Actor Vikram's birthday celebrated

    அதேபோல், இந்த ஆண்டும் தென் சென்னையைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ரத்ததான முகாம் அமைத்தனர். அதில் பலர் ஆர்வத்துடன் ரத்த தானம் கொடுத்தனர்.

    வருடம்தோறும் இது தொடரும் என ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    English summary
    Actor Vikram's birthday celebrated everywhere by his fans. In south chennai fans also celebrated by donating blood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X