விக்ரமுடன் சியான் 61 படத்தில் ஜோடி சேராத ராஷ்மிகா.. லிஸ்ட்ல அடுத்தது யார் பாருங்க!
சென்னை : நடிகர் விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இதில் கோப்ரா கலவையான விமர்சனங்களையும் பொன்னியின் செல்வன் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய சியான் 61 படத்திற்காக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இணைந்துள்ளார்.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது பல படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. ஷங்கர் உள்ளிட்டவர்களின் பிரம்மாண்ட இயக்கத்திலும் நடித்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார் விக்ரம்.

கேரியர் பெஸ்ட் படம்
குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்தது. இந்தப் படத்தில் கெட்டப் சேஞ்சிற்காக அதிகமாக மெனக்கெட்டார் விக்ரம். இந்தப் படத்தில் இது விக்ரமா என்ற கேள்விகளையும் இவரது கேரக்டர் எழுப்பியது. தொடர்ந்து ராவணன் உள்ளிட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை வாங்கினார்.

நல்ல விமர்சனங்களை பெற்ற மகான் படம்
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான மகான் படமும் இவரது நடிப்பிற்கு நல்ல சான்றை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் கெட்டப் பழக்கங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு திண்டாடும் சாமானிய மனிதனின் வாழ்க்கையை வெளிப்படுத்தினார் விக்ரம்.

மாறுபட்ட கதைக்களத்துடன் கோப்ரா
இந்தப் படத்தை தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் கணக்கு வாத்தியாராக விக்ரம் நடித்து வெளியான கோப்ரா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது. நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்து வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர தவறி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மிரட்டிய ஆதித்த கரிகாலன்
ஆனால் அடுத்த சில தினங்களிலேயே வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து மிரட்டினார் விக்ரம். இந்தப் படத்தில் இவரது சிறப்பை சொல்வதாக அமைந்த சோழா சோழா பாடலிலும் இவரது நடனம் சிறப்பாக அமைந்தது. நாவலில் கவர்ந்ததை போலவே இந்த கேரக்டர் திரைப்படத்திலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்
இந்தப் படங்களுக்காக அடுத்தடுத்து பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்து இந்தியா முழுவதிலும் பயணம் மேற்கொண்டார் நடிகர் விக்ரம். இந்த ஆரவாரங்கள் எல்லாம் ஓய்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சியான்61 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார்.

சியான் 61 படத்தின் சூட்டிங்
கடந்த ஜூன் மாதத்திலேயே இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் நாளைய தினம் கடப்பாவில் முதல் கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. சில தினங்கள் அங்கு சூட்டிங் நடக்கவுள்ள நிலையில், தீபாவளியையொட்டி சிறிது இடைவெளி விடப்படவுள்ளதாகவும் மீண்டும் சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜோடி சேராத ராஷ்மிகா மந்தனா
இந்தப் படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா விக்ரமிற்கு ஜோடியாக இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து லேடி லீட்டாக மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கேஜிஎப் மக்களின் வாழ்க்கை
3டி படைப்பாக மிகவும் பிரம்மாண்டமாக பிரிட்டீஷ் காலகட்டத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை கூறும் படமாக இந்தப் படம் தற்போது உருவாகவுள்ளது. இதனிடையே தீபாவளியையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











