ஹாலிவுட் படத்தின் காப்பியா கோப்ரா.. இணையத்தில் வெளியான வீடியோ!

சென்னை : நேற்றைய தினம் கோப்ரா படம் விக்ரம், ஸ்ரீநிதி, மிருணாளினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என சிறப்பான படங்களை சிறப்பான கதைக்களத்துடன் கொடுத்து நல்ல பேன் பேசை உருவாக்கி வைத்திருந்த அஜய் ஞானமுத்து தற்போது இந்தப் படத்தின்மூலம் சொதப்பியுள்ளதாக விமர்சனங்களை பெற்றுள்ளார்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் என்ற மகா நடிகர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது மகான். இந்தப் படத்தில் அவர் தனது மகன் த்ருவுடன் இணைந்து நடித்திருந்தார். சிம்ரன் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்திருந்தனர். படத்தில் தன்னுடைய ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றியிருந்தார் விக்ரம்.

 அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இவரது நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் நேற்றைய தினம் கோப்ரா படம் வெளியானது. அடுத்த மாதம் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படங்களின் பிரமோஷன்களில் அடுத்தடுத்து ஈடுபட்டு வந்தார் விக்ரம்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான கோப்ரா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரசிகர்களை சந்தித்தது. ஆனால் அவர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் கெட்டப்பிற்கு மெனக்கெட்ட இயக்குநர் அஜய் ஞானமுத்து திரைக்கதைக்கு மெனக்கெட்டிருக்கலாம் என்பதே அவர் மீதான விமர்சனமாக விழுந்துள்ளது.

கானலாக மாறிய முயற்சிகள்

கானலாக மாறிய முயற்சிகள்

இந்தப் படத்திற்காக இதன் உருவாக்கத்திற்காக மிகுதியாக மெனக்கெட்டிருக்கிறார் அஜய். ஆனால் அவை அனைத்துமே கானலாக மாறியுள்ளது. அவரது முந்தைய படங்களான டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள், அவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையும் பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில் அதை தக்க வைக்க தவறிவிட்டார் அஜய்.

சொதப்பிய திரைக்கதை

சொதப்பிய திரைக்கதை

விக்ரம் போன்ற பெரிய நடிகர், பிரம்மாண்டமான தயாரிப்பு என அவர் பயன்படுத்திக் கொள்ள அதிகமான அம்சங்கள் இருந்தும் திரைக்கதையில் சொதப்பியுள்ளார். அவரையும் படத்தையும் நேற்று படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் வைத்து செய்து வருகின்றனர். மீம்ஸ்கள் பறக்கின்றன. இந்நிலையில் தற்போது படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதற்கும் ரசிகர்கள் ஆதாரம் காட்டியுள்ளனர்.

ஹாலிவுட் படத்தின் காப்பியா?

ஹாலிவுட் படத்தின் காப்பியா?

படத்தில் மதியை விசாரிக்கும் காட்சி ஏற்கனவே அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் காட்சி அந்நியன் படத்திலிருந்து உருவப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தக் காட்சி ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதற்கும் ஆதாரம் காட்டியுள்ளனர்.

வீடியோ பகிர்ந்த ரசிகர்கள்

வீடியோ பகிர்ந்த ரசிகர்கள்

இதற்கான வீடியோவையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் மதி, தன்னுடைய அம்மா உள்ளிட்டவர்களுடன் பேசுவது போன்ற காட்சியில், ஹாலிவுட் ஹீரோ காணப்படுகிறார். அவரைச் சுற்றியும் 4 கேரக்டர்கள் மற்றும் அவர்கள் பேசுவதையே ஹீரோவும் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ரசிகர்கள், என்னங்கடா அப்படியே எடுத்து வச்சிருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளனர். கொடுத்த காசுக்கு இர்பானை போலிங்காவது போட சொல்லியிருக்கலாம் என்றும் இந்தக் காட்சி மிகவும் கடுப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

பாசிட்டிவ் கமெண்ட்

பாசிட்டிவ் கமெண்ட்

காப்பியே அடித்திருந்தாலும் காட்சியை நன்றாக எடுத்திருக்கலாம், காது ஜவ்வு கிழிந்தது தான் மிச்சம் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் பாசிட்டிவ் கமெண்ட்டும் வந்துள்ளது. காட்சியில் இன்ஸ்பயர் ஆகிய இந்தக் காட்சியை படத்தில் சேர்த்திருக்கலாம், அதில் என்ன தவறு என்றும் ஒரு ரசிகர்கள் கேட்டிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X