விக்ரமின் கோப்ரா படம்.. சோனி லைவில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகிறது!

சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது கோப்ரா படம்.

இந்தப் படத்தில் சிறப்பான கெட்டப்புகளால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் விக்ரம்.

கணிதத்தால் அனைவரையும் கலங்கடிக்கும் ஒரு சாமானிய ஆசிரியராக விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியானது மகான் படம். இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரமும் கலக்கான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மகான் படம்

மகான் படம்

சாமானியனின் விருப்பம் குறித்த கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டவர்களும் நடித்த நிலையில் வாணி போஜனின் காட்சிகள் நீக்கப்பட்டு பின்பு விடுபட்ட காட்சிகளாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரமின் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா படம் வெளியானது.

விக்ரமின் கோப்ரா படம்

விக்ரமின் கோப்ரா படம்

இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரமை பார்க்க முடிந்தது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படத்தில் கணக்கு வாத்தியாராக நடித்திருந்தார் விக்ரம். தன்னுடைய கணக்கு புலமையை பயன்படுத்தி இவர் நிகழ்த்தும் கொலைகள் ரசிகர்களை வியப்பிற்குள்ளாக்கின.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் திரையரங்குகளில் ரிலீசானது. ரிலீசுக்கு முன்னதாக சிறப்பான பிரமோஷனிலும் படக்குழு ஈடுபட்டது. இதனிடையே இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூலிலும் சொதப்பியது. படத்தின் ஆறுதல்களாக விக்ரம் நடிப்பு மற்றும் ஏஆர் ரஹ்மானின் இசையே இருந்தது.

சோனி லைவ்வில் வெளியாகும் கோப்ரா

சோனி லைவ்வில் வெளியாகும் கோப்ரா

இதனிடையே இந்தப் படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி அவதாரங்களை எடுத்து கணிதத்தால் அனைவரையும் கலங்கடித்த சாமானிய ஆசியரிரின் கதை என்று சோனி லைவ் கேப்ஷனிலும் தெரிவித்து, வரும் செப்டம்பர் 28ம் தேதி படம் சோனி லைவ்வில் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. படத்தின் வீடியோவையும் இணைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X